லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 6  பேர் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும் கோவையில் அவர்கள் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் உளவுத்துறைக்கு தகவல் வந்திருக்கிறது . இதையடுத்து தமிழக அரசை உளவுத்துறை எச்சரித்தது .

உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது . குறிப்பாக கோவையில் தாக்குதல் நடத்த கூடும் என்று தகவல் வந்திருப்பதால் 2000 போலீசாருக்கு மேல் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர் . சோதனை சாவடிகள் முழுவதும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன . பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது .

இந்தநிலையில் பிளாக் கமாண்டோ எனப்படும் அதிவிரைவு சிறப்பு படையினர் கோவையில் இறக்கப்பட்டுள்ளனர் . நகரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துப்பாக்கி ஏந்திய கமெண்டோ படை வீரர்கள் இன்று அணிவகுப்பு நடத்தினர்.  மேலும்  பேருந்து நிலையத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் சிறப்பு காவல் படையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.