கேரளத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி பொது மக்கள் முன்னிலையில் தாக்குதலுக்கு உள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பலமான எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. 

கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஷா தமிழகத் தம்பதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் வயநாட்டில் தமிழ் பேசும் தம்பதியரை, கேரள மாநிலத்தின் உள்ளூர்காரர் ஒருவர் குரூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி தென்னிந்தியாவையே அதிர வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், கேரளாவைச் சேர்ந்த உள்ளூர்க்காரர் சஜீவானந்தன் என்பவர், கூட்டமாக இருந்த மக்களுக்கு முன்னால் ஒரு நபரை போட்டு குரூரமாகத் தாக்குகிறார். அப்போது அவரைத்தடுக்கச் செல்கிறார் ஒரு பெண்.

அந்த பெண்ணிடம், சஜீவானந்தன், ‘நீ யார்?’ என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பெண், ‘நான் அவரது மனைவி...’ என்கிறார்.  உடனே அந்த பெண்ணையும் சஜீவானந்தன் ஓங்கி அறைகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப்பெண் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கேரளத்தவர்களை பார்த்து, ’நீங்கள் யாரும் தட்டிக் கேட்க மாட்டீர்களா? உங்களிடம் மனசாட்சி இல்லையா..? போலீசை கூப்பிடுங்கள் எனக் கூறிய படியே தாக்குதலுக்கு உள்ளான கணவனை பார்த்து கதறி அழுகிறார். இதனை அங்கு கூடியிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதன் பின்னர் சமூக வலைதளத்தில் வெளியான இந்த வீடியோ பலரையும் உலுக்கியுள்ளது. இதனையடுத்து, தாக்குதல் நிகழ்த்திய சஜீவானந்தம் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, அவரைத் தேடிவருகின்றனர். 

இதேபோல் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட தம்பதியர் இருவரும் தமிழ் பேசுபவர்கள் என்பது தெரியவந்ததை அடுத்து, விசாரித்தபோது, அவர்கள் இருவரின் உறவில் சந்தேகப்பட்டு சஜீவானந்தம் தாக்கினார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து அம்பலவயல் போலீஸார் இந்த வீடியோவில் உள்ளவர்களைத் தேடிவருகின்றனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய கேரள டிரைவர் மீது மகளிர் ஆணையம் புகார் பதிவு செய்துள்ளது. 

இதற்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஒரு கேரள பெண் வீடியோ ட்விட்டரில் இப்போது வைரல் ஆகிறது, நீங்கள் அதை கண்டிக்காததால் தயவு செய்து அதை பகிர வேண்டாம். அந்த வயதில் அந்த வீடியோவில் நான் இருந்திருந்தால் நான் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டு இறந்திருப்பேன். அவள் என் போல் பலவீனமாக இல்லை என நம்புகிறேன்...’’ என கருத்து தெரிவித்து வருகின்றனர்.