Asianet News TamilAsianet News Tamil

மார்ட்டினின் பங்களாவில் ரகசிய அறை!! வாயை பிளக்க வைக்கும் பண்டல் பண்டலாக பணம்...தங்க குவியல்!!

மார்ட்டினுககு சொந்தமான வீட்டில் கடந்த 5 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வரும் வருமான வரித்துறையினர், அவரது வீட்டில் யாரும் கண்டறிய முடியாத வகையில் கட்டப்பட்ட ரகசிய அறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

Suspense revealed Lottery martin house
Author
Coimbatore, First Published May 4, 2019, 7:26 PM IST

கோவையைச் சேர்ந்தவர் லாட்டரி தொழிலில் பிரபலமானவர் மார்ட்டின். இவர் நாடு முழுவதும் லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மார்ட்டினுக்கு சொந்தமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 70 இடங்களில் வருமான வரித் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். அதிபர் மார்ட்டினுக்குத் தொடர்புடைய கோவையில் 22 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும், கொல்கத்தாவில் 18 இடங்களிலும் மற்றும் மும்பை, சிலிகுரி, கவுகாத்தி, ஹைதராபாத், ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் லாட்டரி  இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

கோவையில் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள அவரது இல்லத்திலும், அதன் அருகிலேயே உள்ள அவருக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றிலும் போலீஸார் சோதனை நடத்தியதில் மார்ட்டினின் வீட்டில் ஒரு பக்கம் சிறிய ஏணிப்படிகள் போன்ற அமைப்பு இருந்த நிலையில், சுவரைத் தட்டிப் பார்த்த வருமானவரித்துறை அதிகாரி, சந்தேகத்தின்பேரில், அந்த சுவரை உடைத்தபோது, அதன் பின் ரகசிய அறை இருப்பதும் தெரிய வந்தது. 

அந்த ரகசிய அறைக்குள் நுழைந்த வருமான வரித்துறையினருக்கு கார்த்திருந்தது அதிர்ச்சி, அங்கு பண்டல் பண்டலாக அடுக்கி வைத்திருந்த பணத்தைப் பார்த்து  அதிர்ந்து போயினர். 500, 200 ரூபாய் கட்டுகள் என ரூ.8.25 கோடி பணம் இருந்தது. இதில், 5 கோடி பணத்துக்கு ஆவணங்கள் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இதுவரை  595 கோடி ருபாய் வரி ஏய்ப்பு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆடம்பர பங்களாவில் உள்ள ரகசிய அறையில் ரூ.8.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இதில் 5.8 கோடி கணக்கில் வராத பணம் என்று தெரிவித்து உள்ளது. மேலும் கைப்பற்றியதில், தங்கம் மற்றும் வைர நகைகளின் மதிப்பு ரூ.24.57 கோடி என்றும் தெரிவித்து உள்ளது. தங்கம் மற்றும் வைர நகைகள் கணக்கில் காட்டப்படாத ரூ.1,214 கோடி சொத்து ஆவணங்கள், முதலீடுகள், செலவின விவரங்களை வருமான வரித்துறையினர் கண்டறிந்துள்ளனர். 

இது ஒருபுறம் இருக்க, மார்ட்டினின் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேஷியர் பழனி என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios