காதலியின் நடத்தையில் சந்தேகம் காரணமாக காதலன் காரில் அழைத்து சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 19 வயது பெண்ணான குஷி பரிக்கார்,  அஸ்ராஃப் ஷேக் என்ற இளைஞரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த குஷி அடிக்கடி பேஷன் ஷோக்களில் தலைகாட்டி வந்துள்ளார். மாடலிங் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கலந்து கொண்டுள்ளார். 

இதனால், தான் உயிருக்கு உயிராக காதலித்தாந்த பெண்ணின் மீது மீது அஸ்ராஃபிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  இருவரும் கடந்த 12 ம் தேதி காரில் நாக்பூரின் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளனர். அப்போது காதலியின் கழுத்தை நெரித்து அஸ்ராஃப் கொலை செய்துள்ளார். சடலத்தை நாக்பூர் நெடுஞ்சாலையிலுள்ள ஒரு கிராமத்தின் அருகில் வீசிவிட்டு சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று நெடுஞ்சாலையில் பெண்ணின் சடலத்தை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

முதல்கட்டமாக அவர் யாரென்று அடையாளம் காணப்படவில்லை. பின்னர் சமூக வலைதளங்களில் அவருடைய போட்டோவை வைத்து நாங்கள் அடையாளம் கண்டோம் என போலீசார் கூறியுள்ளனர்.  விசாரணையின் முடிவில் காதலன் அஸ்ராஃப் ஷேக் சிக்கியுள்ளார். அவர் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.