Asianet News TamilAsianet News Tamil

ஜீவஜோதியால் சீரழிந்த சரவண பவன் அண்ணாச்சி... இன்னும் நான்கே நாட்களில் உச்சநீதிமன்ற கெடு முடிவு..!

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்த உச்சநீதிமன்றம் ஜூலை 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 

 

Supreme Court decision in four days
Author
Tamil Nadu, First Published Jul 3, 2019, 6:26 PM IST

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்த உச்சநீதிமன்றம் ஜூலை 7ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. Supreme Court decision in four days

சரவண பவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஏற்கனவே 2 மனைவிகள் இருந்தபோதிலும் மூன்றாவது மனைவியாக ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஜீவஜோதியின் தந்தை சரவணபவனில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். ஆனால் ஜீவஜோதி தனது உறவினரான பிரின்ஸ் சாந்தகுமாரை திருமணம் செய்துக்கொண்டார். இருப்பினும், ஜீவஜோதியை எப்படியாவது திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என நினைத்து ஜீவஜோதியின் கணவரை கொன்றுவிட்டு, அவரை திருமணம் செய்துக்கொள்ளலாம் எனத் திட்டம் தீட்டி, பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று கொலை செ‌ய்தார். Supreme Court decision in four days


இந்த வழ‌க்‌கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், 2004 ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆ‌கியோரு‌க்கு 7 முத‌ல் 9 ஆ‌ண்டுக‌ள் வரை த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. கட‌த்த‌ல் வழ‌க்‌கி‌ல் ராஜகோபாலு‌க்கு 3 ஆ‌ண்டு‌ம், ம‌ற்ற 8 பேரு‌க்கு இர‌ண்டு ஆ‌‌ண்டுக‌ளும் த‌‌ண்டனை ‌‌வி‌தித்து தீர்ப்பு வழங்கியது. Supreme Court decision in four days

இ‌ந்த தீர்ப்பை எதிர்த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌நீ‌திபதிகள் பி.கே.மிஸ்ரா, பானுமதி ஆகியோ‌ர் அடங்கிய அ‌ம‌ர்வு, ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த 10 ஆ‌ண்டு ‌சிறைத்த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரிப்பதாக அறிவித்து தீர்ப்பு வழங்கியது. 

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்ததின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. தற்போது பிணையில் இருக்கும் ராஜகோபால் ஜூலை 7 ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios