சென்னை குன்றத்தூரில்  பிரியாணிக் காரனுடனான உல்லாச வாழக்கைக்கு ஆசைப்பட்டு, காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனை விட்டுவிட்டு, தான் பெற்ற இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று விட்டு, கணவனையும்  கணவனைக் கொள்ளக் காத்திருந்த  அபிராமியை பற்றியும் சுந்தரத்தை பற்றியும், அவருடைய மனைவி கண்ணீர் மல்க வாக்கு மூலம் கொடுத்துள்ளார். 

குன்றத்தூரில் குடும்பம் குழந்தை என தன்னுடைய குடும்பத்துடன், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த அபிராமியின் வாழ்க்கை புரட்டி போட்டுள்ளது 2 மாத கள்ளக்காதல். 

தன் கணவர் மற்றும் குழந்தை, எந்த உறவு பற்றியும் சிறிதும் கவலை இல்லாமல், தன்னுடைய  இச்சைக்காக இரண்டு குழந்தைகள் மற்றும் கணவரை கொள்ள முயற்சி செய்து, பாலில் விஷம் கலந்து கொடுத்து தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு, கள்ளக் காதலன் சுந்தரத்துடன் நாகர்கோவில் சென்ற அவரை போலீசார் வளைத்து பிடித்து, புழல் சிறையில் அடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அபிராமியை பற்றியும் அவருடைய கள்ளக்காதலன் சுந்தரத்தை பற்றியும் போலீசார் அவர்களின் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் அதிர்ச்சி கொடுக்கும் பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது போலீசார் சுந்தரத்தின் மனைவியிடம் விசாரணை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர் டுந்தரத்தின் மனைவி தான் என்றும் சொல்லலாம்.சுந்தரம் பற்றி அவர் மனைவி கூறுகையில், மூன்று ஆண்டுகள் சுந்தரத்தை காதலித்து, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டேன். சுந்தரத்திற்காக நான் என்னுடைய சொந்த ஊரான பொள்ளாச்சியை விட்டு இவருக்காகவே சென்னைக்கு வந்தேன்.  ஆனால், இவர் இப்படி எனக்கு துரோகம் செய்வார் என எதிர்ப்பார்க்கவே இல்லை என கூறியுள்ளார்.

அபிராமி பற்றி இவர் கூறுகையில், அபிராமியை கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பே எனக்கு தெரியும். அவரை வீட்டிற்கு அழைத்து வந்த போது, குடும்ப நண்பர் என சொல்லி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நானும் அதனை நம்பி அவருடன் மிகவும் அன்பாகத்தான் பழகினேன். ஆனால் இவர்களுக்குள் இப்படி ஒரு கேவலமான உறவு  இருக்கும் என நான் சற்றும் எதிர்ப்பார்க்கவே இல்லை என்று கண்ணீரோடு கூறியுள்ளார்.