Asianet News TamilAsianet News Tamil

ஹத்ராஸ் சம்பவத்தில் திடீர் திருப்பம்... இளம்பெண்ணை குடும்பத்தினரே கொன்று நாடகம்... அதிர வைக்கும் கடிதம்..!

எங்களது நட்பினால் ஆத்திரமடைந்த, பெண்ணின் தாயாரும், சகோதரர்களும் அவரை அடித்து, கடுமையாக காயப்படுத்தி உள்ளனர் என கிராமவாசிகள் கூறியதில் இருந்து தெரிய வந்தது.
 

Sudden turn in the Hadras incident ... The drama of killing the girl's family ... A shocking letter
Author
Uttar Pradesh West, First Published Oct 8, 2020, 3:55 PM IST

உத்திரப்பிரதேசத்தில், ஹத்ராஸ் நகரில் 19 வயது இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினரே அடித்து கொன்றுவிட்டதாக , இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.Sudden turn in the Hadras incident ... The drama of killing the girl's family ... A shocking letter

உ.பி.,யின் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 14ம் தேதி, 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தொடர்ந்து கடுமையாக தாக்கப்பட்ட அவர், டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக,  இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அமைத்து உள்ளார். அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 4 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ள இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மாநில அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மாநில அரசை கண்டித்து அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.Sudden turn in the Hadras incident ... The drama of killing the girl's family ... A shocking letter

இளம்பெண்ணின் சகோதரர் கூறுகையில், இச்சம்பவத்தை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், இதுதொடர்பாக ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு, சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரில் ஒருவரை நன்கு தெரியும் என போலீசார் கூறியிருந்தனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் சந்தீப் தாகூர் என்பவரும் ஒருவர். இந்நிலையில், அலிகார் சிறையில் உள்ள அவர் ஹத்ராஸ் போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், சந்தீப் உள்பட 4 பேரும் பெருவிரல் ரேகைகளை பதிவு செய்துள்ளனர். அந்த கடிதத்தில், ’’நானும், அந்த இளம்பெண்ணும் நண்பர்கள்.  ஒருவரை ஒருவர் சந்திப்பதுடன் இல்லாமல் தொலைபேசி வழியேயும் பேசிக்கொள்வோம். எங்களது நட்பு அவர்களது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. சம்பவத்தன்று, வயலில் இருந்த பெண்ணை சந்திக்க சென்றேன். அங்கே அவரது தாயாரும், சகோதரர்களும் இருந்தனர். என்னை வீட்டுக்கு போகும்படி அந்த பெண் கேட்டு கொண்டதற்கேற்ப திரும்பி சென்றேன். பின்பு கால்நடைகளுக்கு தீவனம் கொடுக்க சென்றேன்.அதன்பின்பே, எங்களது நட்பினால் ஆத்திரமடைந்த, பெண்ணின் தாயாரும், சகோதரர்களும் அவரை அடித்து, கடுமையாக காயப்படுத்தி உள்ளனர் என கிராமவாசிகள் கூறியதில் இருந்து தெரிய வந்தது.Sudden turn in the Hadras incident ... The drama of killing the girl's family ... A shocking letter

அந்த பெண்ணை ஒருபோதும் நான் அடிக்கவில்லை.  அவரிடம் தவறாக எதுவும் நடந்து கொள்ளவில்லை.  என் மீதும், மற்ற 3 பேர் மீதும் அந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர்கள் தவறாக பழி சுமத்தி சிறைக்கு அனுப்பி வைத்து விட்டனர். நாங்கள் அனைவரும் ஒன்றுமறியாத அப்பாவிகள்.  நீங்கள் விசாரணை மேறகொண்டு, எங்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என வேண்டி கேட்டு கொள்கிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios