லலிதா ஜுவல்லரியில் கடந்த 2- ம்தேதி ரூ.13 கோடி அளவிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சல்லடை போட்டு கொள்ளையர்களை தேடியதில் முருகன், மணிகண்டன், சுரேஷ் உள்ளிட்டோர் இந்தச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதில் மணிகண்டன் காவல்துறையினர் நடத்திய சோதனையில் மணிகண்டன் மாட்டிக்கொண்டான். சுரேஷ் நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் சரண்டரான நிலையில் நேற்று இந்தக் கொள்ளையில் மூளையாக செயல்பட்ட முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண்டர் ஆனான்.


பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கர்நாடக போலீஸார் தமிழகம் வந்து சுமார் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கைப்பற்றினர். கர்நாடக காவல்துறையினர் நகைகளை மீட்டுச் சென்றபோது தமிழகத்தை சேர்ந்த பெரம்பலூர் காவல்துறையினர் காரில் துரத்திச் சென்று அந்த நகைகளை மீட்டனர்.

 

இந்த விசாரணையில், நகைகளை கொடுத்து விட்டு 7 லட்சம் ரூபாயை முன்பணமாக கொள்ளைக்கும்பல் பெற்றுக்கொண்டது தெரிய வந்தது. இந்நிலையில் நாலை மறுநாள் கொள்ளையன் சுரேஷை காவலில் எடுத்து அவனிடம் விசாரணை நடத்த தமிழக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.