சப் – இன்ஸ்பெக்டர் வில்சனை கொன்றது இதனால் தான் !! குற்றவாளிகள் பகீர் வாக்குமூலம் !!

தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வந்ததால் போலீசாருக்கு எதிர்ப்பை காட்டவே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுகொன்றதாக குற்றவாகிளள் பகீர்  வாக்குமூலம் அளித்துள்ளனர்.

sub inspector   wilson  killed for this purpose

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரும் கடந்த 8-ம் தேதி  துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள்.

இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வந்த நிலையில், கர்நாடகா மாநிலம் உடுப்பி ரெயில் நிலையத்தில் இரண்டு  பேரையும் கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.  

sub inspector   wilson  killed for this purpose

இந்நிலையில் கைதான வாலிபர்கள் நேற்று தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்ட போலீசார் இரண்டு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளை இன்று கன்னியாகுமரி போலீசார் குழித்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

sub inspector   wilson  killed for this purpose

முன்னதாக கியூபிராஞ்ச் போலீசார் கைது செய்யபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வந்ததால் போலீசாருக்கு எதிர்ப்பை காட்டவே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுகொன்றதாக அவர்கள் கூறினர். மேலும் போலீசார் தங்களை  என்கவுண்டர் செய்யகூடும் எனவும் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios