வாகன சோதனையில் சிக்கும் பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய உதவி ஆய்வாளரல் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூரில் போக்குவரத்து காவல் பிரிவில் உதவி ஆய்வாளராக ராஜமாணிக்கம் பணியாற்றி வந்தார். இவர் தினமும் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாத பெண் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து ரசீதுகளை கொடுத்துள்ளார். மேலும் பிடிபட்ட பெண்களிடம் செல்போன் எண்களையும் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் வாங்கிய செல்பொன் எண்களுக்கு இரவு நேரத்தில் ஆபாச வீடியோக்களை ராஜ மாணிக்கம் அனுப்பியதாக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்களின் உறவினர்கள் உதவி ஆய்வாளர் ராஜ மாணிக்கத்தை நேரில் பார்த்து எச்சரித்துள்ளனர்.  இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த சம்பவத்தை அடுத்து உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கத்தை வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். மேலும் விசாரணையில் பெண்களுக்கு ஆபாச தகவல் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.