விழுப்புரம் மாவட்டம்  உளுந்தூர்பேட்டைஅருகே உள்ள மூலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். உளுந்தூர்பேட்டையில் ஸ்டூடியோ நடத்தி வந்தார். 

இன்று காலை மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் ஸ்டூடியோ நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை  மின்வாரிய அலுவலகம் அருகே சென்ற போது ஒரு கார் வந்தது. இந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மணிகண்டன் கீழே விழுந்தார். 

உடனே காரில் இருந்து இறங்கி வந்த கும்பல் மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் மணிகண்டன் பிணமானார். 

இதனை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து காரில் ஏறி சென்றது. சிறிது தூரம் சென்றதும் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே காரில் வந்தவர்கள் அதனை நிறுத்தி விட்டு ஓடிவிட்டனர். 

தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக  உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார்வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் நிறுத்தி சென்ற கார் மற்றும் அதில் இருந்த  ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். 

எனினும் கொலையாளிகள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக மணிகண்டனை கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.