2 நாட்களாக ஆசிரியருக்கு அனுப்பிய ஆபாச மெசேஜ்..! சிக்கிய 2 பேர் யார் தெரியுமா..?

கல்லூரி பேராசிரியருக்கு மெசேஜை அனுப்பிய இரண்டு மாணவர்கள் அதிரடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்கள் கண்டிப்பது வழக்கம்.

ஆனால் இன்று இருக்கும் மாணவர்களோ ஆசிரியர்கள் எதைச்சொன்னாலும் அதனை வேறு  மாதிரி எடுத்துக்கொண்டு, ஆசிரியர்களை எப்போது நேரம் கிடைக்கும் என காத்திருந்து பழி வாங்குவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆபாச மெசேஜ் வந்த வண்ணம் இருந்துள்ளது. இந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் இந்த மெசேஜை அனுப்பியது ஒருவரல்ல அவருடைய கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்கள் என தெரிய வந்தது. பின்னர் மாணவர்களின் இந்த ஒழுங்கீன நடத்தைக்கு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.