Asianet News TamilAsianet News Tamil

வகுப்பறையில் மாணவி மர்ம மரணம்... சிசிடிவியில் தேடிய போலீஸ்! ஸ்கூட்டரில் உடலை கொண்டு செல்ல முயன்ற தந்தை... மதுரை பரபரப்பு

பள்ளிக்கூட வகுப்பறையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து,  அவரது உடலை பெற்றோர் ஸ்கூட்டரில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

student suicide at class room
Author
Madurai, First Published Sep 8, 2019, 4:18 PM IST

பள்ளிக்கூட வகுப்பறையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து,  அவரது உடலை பெற்றோர் ஸ்கூட்டரில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை புதூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த முத்து. கொத்தனார், இவருக்கு  2 மகள்கள் உள்ளனர். அதில் 2-வது மகள் அர்ச்சனா. அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார். வழக்கம் போல நேற்று காலை பள்ளிக்கு சென்ற அவர், வகுப்பறையில் யாரும் இல்லாததால் ,வகுப்பறையின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு விட்டு.  ஆசிரியை அமரும் நாற்காலி மீது ஏறி நின்று, ஃபேனில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார்.

அப்போது, வகுப்பறையில் நுழைந்த இன்னொரு மாணவி , அர்ச்சனா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி கத்தினார். வகுப்பறையில் அர்ச்சனா தூக்கில் தொங்கியது குறித்து அவரது சக மாணவிகளுக்கு தெரியவந்தது. அதில் ஒரு மாணவி, அருகில் உள்ள வீட்டுக்கு வேகமாக ஓடிச் சென்று, அர்ச்சனாவின் தந்தை முத்துவிடம் கூறியுள்ளார்.

உடனே முத்து பதறியபடி பள்ளிக்கு ஓடி வந்து, தூக்கில் தொங்கி கொண்டிருந்த அர்ச்சனாவை கீழே இறக்கினார். ஆசிரியைகளும் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவியை ஆட்டோவில் ஏற்றி, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அர்ச்சனா இறந்துவிட்டது கூறியுள்ளனர். அதன் பின் அவர் மகளின் உடலை பள்ளிக்கு கொண்டு வந்தார். இதற்கிடையே பள்ளி நிர்வாகத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார். அப்போது தகவல் அறிந்து கூடிய அந்த பகுதி மக்கள், மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கூடம் முன்பு திரண்டனர். மகளின் உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல முத்து முடிவு செய்தார். அதற்காக அவர் அருகில் உள்ள ஆட்டோவை அழைத்த போது யாரும் வரவில்லை. எனவே அர்ச்சனாவின் உடலை உறவினர்கள் உதவியுடன் ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றார். 

அப்போது போலீசார் அவர்களை தடுத்தனர். ஆனால் அர்ச்சனாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு மேலும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் தகராறு செய்தவர்களை அங்கிருந்து விரட்டி, அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்டுவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் கமிஷனர் வந்து விசாரணை நடத்தினார். அப்போது மாணவி தற்கொலைக்கான பின்னணி குறித்து ஆராய அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்ததில், மாணவி பள்ளி வகுப்பறைக்குள் காலை 7.58 மணிக்கு நுழைவதும், அதன்பின், இன்னொரு மாணவி கதவை தீந்து பார்த்துவிட்டு ஓடி வந்ததும், அடுத்ததாக அவரது தந்தை கதவை திறந்து மாணவியின் உடலை வெளியே தூக்கி வரும் காட்சிகளும் இருந்துள்ளன.

மாணவி அர்ச்சனா கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் அவர் பள்ளிக்கு ஒழுங்காக செல்லவில்லை என்றும், உடல்நிலை பாதிப்பு அவரது படிப்பை பாதித்ததால்தான், அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டார் என்று உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.அதே நேரத்தில் மாணவியின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து அவரது பெற்றோர் மற்றும் உடன் படிக்கும் மாணவிகளிடம் போலீசார் தொடர்ந்து போலீசார்  விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios