Asianet News TamilAsianet News Tamil

மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட மாணவன்!! ரத்த வாந்தி எடுத்து பரிதாப பலி...

மெடிக்கலில்  வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கி சாப்பிட்ட சிறுவன் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் இறந்ததற்கு காரணம் அந்த மாத்திரை தான் என உறவினர்கள் கூறுகின்றனர்.
 

Student blood vomit Death for tablet
Author
Thiruvannamalai, First Published Jun 20, 2019, 5:40 PM IST

மெடிக்கலில்  வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கி சாப்பிட்ட சிறுவன் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் இறந்ததற்கு காரணம் அந்த மாத்திரை தான் என உறவினர்கள் கூறுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார், பேரரசி  தம்பதியின் மகன் ஹரிகரண். ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு, நேற்று  திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் அழுதுள்ள அந்த சிறுவனின் நண்பர்கள், பக்கத்திலுள்ள மெடிக்கலில் மாத்திரை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

அந்த மாத்திரையை சாப்பிட்டுவிட்டு சில மணி நேரம் கழித்து வீட்டிற்குச் சென்ற ஹரிகரண் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளான். இதனால் அதிர்ச்சியான பெற்றோர் உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் விசாரித்ததில், அந்த சிறுவனின் நண்பர்கள் வாங்கிக் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதாக ஹரிகரண் கூறி உள்ளார்.

அந்த மாத்திரையை ஹரிகரணிடம் இருந்து வாங்கிக் கொண்ட டாக்டர்கள், அவனுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ஹரிகரண் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சிறுவன் இறப்பதற்கு முன்னதாக நள்ளிரவில் ரத்த வாந்தி எடுத்ததாகவும் கூறியுள்ளனர். ஹரிகரண் சாப்பிட்ட மாத்திரையால் தான் தனது மகன் இறந்ததாக அவனது தாயார் கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில், மாணவன் மெடிக்களில் வாங்கி சாப்பிட்டதாக சொல்லப்படும் அந்த மாத்திரையானது வயிற்றில் இருக்கும் பூச்சிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தப்படுவது என்றும், மாணவனின் உயிரிழப்புக்கு வேறு காரணங்கள் இருக்கக் கூடும் என்றும்  டாக்டர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளன.மேலும், மாணவனின் உடல் பிரேதப்பரிசோதனைக்குப்பின்னே முழுமையான விவரங்கள் தெரிய வரும் என்று சொல்கிறார்கள் டாக்டர்கள்.  

Follow Us:
Download App:
  • android
  • ios