ஜெய்ஹிந்த் தேவி SI யாக ஆனதும், தன்னை கை விட்டுவிடுவாரோ என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்தார் மாணிக்கவேல், ஜெய்ஹிந்த் தேவியை டார்ச்சர் கொடுத்தே தற்கொலைக்கு தூண்டியது விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

ஜெய்ஹிந்த் தேவி எனும் அவர், தேர்தல் பணிக்காக திருச்சிக்கு சென்று, அங்கு பணிகள் முடிந்த நிலையில் திண்டிவனத்தை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்கொலை தொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஜெய்ஹிந்த் தேவி.  இவர்  நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் பெண் ஆய்வாளராகப் பணி புரிந்து வந்தார். காவல் ஆய்வாளர் பணிக்கு முன்பாக இவர் ஒரு தனியார் கிளினிக்கில் வேலை பார்த்துவந்தார். அப்போது தன்னுடன் பணிபுரிந்து வந்த மாணிக்கவேலு என்பவரைக்  காதலித்து வந்தார். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவுசெய்தார்கள். திருமணமும் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அபிதா, அட்சயா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

S.I. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த ஜெய்ஹிந்த் தேவி தனது விடாமுயற்சியால் தேர்ச்சி பெற்றார். 2004ஆம் ஆண்டில், பயிற்சி S.I யாக கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். 

ஜெய்ஹிந்த் தேவி SI யாக ஆனதும், தன்னை கை விட்டுவிடுவாரோ என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்தார் மாணிக்கவேல். ஆனால் ஜெய்ஹிந்த் தேவி காதலுக்கு மரியாதை கொடுத்து பத்திரிக்கை அடித்து திண்டிவனம் திருமண மண்டபத்தில் மாணிக்கவேலைத் திருமணம் செய்துகொண்டார். அப்படிப்பட்டவரைச் சந்தேகத்தால் தற்கொலைக்குத் தூண்டும் வகையில் செய்துள்ளார் கணவர், இந்த சந்தேகம் இப்போது வந்தது இல்லை ,பலவருடமாகவே குடிபோதையில் பேசி வந்துள்ளார். 

ஜெய்ஹிந்த் தேவி அனைத்துக் கொடுமைகளையும் சகித்துக்கொண்டு இவ்வளவு நாட்கள் வாழ்ந்ததே அபிதா, அக்‌ஷ்யா இரு பிள்ளைகளுக்காகத்தான் என ஜெய்ஹிந்த் தேவியுடன் பணிபுரியும் பெண் போலீசார் சொல்கின்றனர். தினமும், குடித்துவிட்டு வந்து ஜெய்ஹிந்த் தேவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துவதுதான் மாணிக்கவேலின் வழக்கம் என்று திண்டிவனம் காவல்நிலையத்தில் தற்போது புகாரளித்துள்ளார் ஜெய்ஹிந்த் தேவியின் அக்கா ரேணுகா தேவி.