ஸ்ரீபெரும்புத்தூர் அருகே ஆறுமுகம் என்ற கூலித் தொழிலாளி தனது 3 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆறுமுகம் என்ற கூலித் தொழிலாளி தனது 3 குழந்தைகளையும் கொன்றுவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம் (37). இவரது மகள்கள் ராஜேஸ்வரி(12), ஷாலினி(10), மகன் சேதுராமன் (8) ஆகிய 3 பேரையும் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் கையையும், கால்களையும் கட்டி கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். பின்னர் இவர் தனது வீட்டுக்கு அருகில் வயக்காட்டில் இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர் குடும்பத் தகராறு காரணமாகவே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்."