திருவாடானை அருகே கடல் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற 5 கோடிமதிப்புள்ள ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்து 9 பேரை பொறிவைத்து பிடித்து கைது செய்திருக்கிறது தனிப்படை போலீசார் டீம்.

இராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளநம்புதாளையை அடுத்த வீரசங்கலிமடம் பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கிவைத்திருப்பதாக இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்வருண்குமாருக்கு  இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அவரதுஉத்தரவின்பேரில் திருவாடானை டிஎஸ்பி.புகழேந்தி கணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ  இடத்திற்கு சென்று 2பேரை பிடித்து விசாரணை செய்ததில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.

டிஎஸ்பி. புகழேந்திகணேஷ் தலைமையிலான 7சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படைஅமைக்கப்பட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடியதில்இராமநாதபுரம்-  சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியான ஆர்.எஸ்.மங்கலம் அருகில் வைத்து பிடிபட்ட 5 கோடி மதிப்புள்ள ஹெராயின்கள்,36 செம்மரக்கட்டைகள்,கோல்டு பிஸ்கட்டுகள், ரொக்கப்பணம் ரூ.2லட்சம் மற்றும் கடத்தலுக்குபயன்படுத்திய ஆட்டோ, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து,இதை கடல் வழியாகஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 9 பேரை பிடித்து தீவிர விசாரணை செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை அருகே சோளியக்குடி பகுதியைச் சேர்ந்ததாவூத் மகன் அப்துல் வஹாப்(36), வீரசங்கலிமடம் பகுதியை சேர்ந்த அப்துல்மஜீத் மகன் அஜ்மீர் கான்(42), தொண்டி பகுதியை சேர்ந்த  ஜமால்முகம்மதுமகன் அபுல்கலாம் ஆஷாத்(23), கருமொழி  பகுதியை சேர்ந்த ராஜாங்கம் மகன்முத்துராஜா (38), சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா சாலைக்கிராமம்பகுதியைச் சேர்ந்த முகம்மது ஹபீப் மகன் அப்துல் ரஹீம்(49),அதே பகுதியைசேர்ந்த அப்துல்சலாம் மகன் அஜ்மல்கான்(47),

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா சூராணம் பகுதியை சேர்ந்தஞானபாக்கியம் மகன் அருள்தாஸ்(43), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாபெரியகாரை பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மகன் சுரேஷ்குமார்(44),புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்கேசவன்(42)  என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்துஇராமநாதபுரம் மாவட்ட எஸ்பி.வருண்குமார் திருவாடானையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்..
"போதைப்பொருள் கடத்தல் கும்பல் 9 பேரும்,சர்வதேச போதைப்பொருள் கடத்தல்கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், இவர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்ட சுமார் 5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் அனைத்தும்ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டதாகவும்,இதில் தனிப்படை போலீசார்சிறப்பாக செயல்பட்டு 9 பேரை கைது செய்து போதைப்பொருட்களை பறிமுதல்செய்தது பாராட்டுக்கு உரியது என்றும்,போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 9 பேரும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாகவும், இந்த வழக்கில் இவர்களுக்குஅதிகபட்ச தண்டனையாக 20 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.