தந்தையின் ஒன்றரை கோடி  மதிப்புள்ள வீட்டை தனது பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்ட மகன், தனது தாய் தந்தையை  வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். தீர்ப்பாயம் சரியான சவுக்கடியை கொடுத்து அனுப்பியது.

புதுச்சேரி மாநிலம் வழுதாவூர் சாலையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சங்கரதாஸ் சிறுக சிறுக சேமித்து, ராமசாமி பத்மாவதி எஸ்.ராஜ்மோகன் இல்லம் என்ற வீட்டை கட்டியுள்ளார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், ராஜ் மோகன் என்ற மகனும், சபிதா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு கல்யாணம் நடந்துவிட்டது. இதனை அடுத்து மகனுக்கும் காதல் கல்யாணம் செய்து வைத்தார். 

ஐடிஐ. படித்த தான் தொழில் தொடங்க வேண்டும் என்பதால், வங்கியில் கடன் வாங்க வீட்டு பத்திரம் வேண்டும் என்பதற்காக தன் பெயரில் வீட்டை எழுதி வைக்க வேண்டும் என்று மகன் ராஜ்மோகன் கேட்டுள்ளார். மகன் தொழில் தான் தொடங்கப்போகிறார் என நம்பிய  சங்கரதாஸ், தன் பெயரில் இருந்த கனவு வீட்டை மகன் பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு எழுதி கொடுத்துள்ளார். 

சில வருடங்கள் கடந்த நிலையில் பெற்றோரை மதிக்காத மகன், இருவரையும் வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். மனைவியுடன் எங்கே செல்வது என்று தெரியாமல்  அலைந்த சங்கரதாஸ் மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு மகளுக்கு பாரமாக இருக்க விரும்பாத சங்கரதாஸ் வேலை தேடி அலைந்துள்ளார். வேலை தேடி அலைந்த இடத்தில்  ஒருவர்
வழக்கறிஞரை சந்தித்துப் பேசுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து வழக்கறிஞரை சந்தித்த சங்கரதாஸ், நடந்ததை சொல்லியுள்ளார். அந்த வழக்கறிஞர், முதலில் புதுச்சேரியில் உள்ள முதியோர் பராமரிப்பு தீர்வு நடுவர் தீப்பாயத்தில் சங்கரதாஸ் - சிவகாமி தம்பதியினரை புகார் அளிக்க வைத்தார். 

இதையடுத்து சங்கரதாஸ் - சிவகாமி தம்பதியின் மகன் ராஜ்மோகனை அழைத்த தீர்ப்பாய நடுவர், பெற்றோரை அழைத்து பார்த்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் அதை ராஜ்மோகன் ஏற்க வில்லை. இதனையடுத்து ராஜ்மோகன் பெயரில் இருந்த இருந்த வீட்டின் பத்திரத்தை ரத்து செய்த தீர்ப்பாயம், அந்த சொத்தை மீண்டும் சங்கரதாஸ்க்கு திருப்பித் தர உத்தரவிட்டது. இந்த உத்தரவை சங்கரதாஸிடம் கொடுத்த சப்-கலெக்டர் சுதாகர். சார்பதிவாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கும் இந்த ரத்து உத்தரவினை அனுப்பி வைத்தார். அப்பா அம்மாவிற்கு சோறு போடாமலும், அவர்களின் சொத்தை ஏமாற்றி பிடுங்கிய மகனுக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளது தீர்ப்பாயம்.