போதையில் சாலையில் கிடந்த சாப்ட்வேர் பெண்  ஊழியரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் அந்தப் பெண் காவல் நிலையத்தில் காவலர்களை அடித்து துவம்சம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் சரகத்திற்கு உட்பட்ட  பகுதியில் இளம்பெண் ஒருவர் சாலையில் குடிபோதையில் விழுந்து கிடந்தார்.

 

அப்பொழுது அந்தப்பகுதியில் பஞ்சாரா ஹில்ஸ்  போலீசார் ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர்.  அப்போது போதையில் தனிமையில் பெண் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பெண்ணின் பாதுகாப்பு கருதி அவரை அங்கிருந்து மீட்டு, தூக்கி வந்து காவல் நிலையத்தில்  படுக்க வைத்திருந்தனர்.  உச்சகட்ட போதையில் இருந்த அந்த பெண் திடீரென நள்ளிரவில் போதை தெளிந்த நிலையில் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்ததுடன்,  எதற்காக என்னை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்று கேட்டு அங்கு பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர்,  மற்றும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசியதுடன்  அங்கிருந்த காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினார்.

உடனே அதைத் தடுக்கச்  முற்பட்டபோது ஒரு பெண் காவலரின் கையை பிடித்து, அவர் கடித்ததுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார், அப்போது மற்றொரு பெண் காவலர் அந்த பெண்ணை மடக்க முயற்சி செய்தபோது அவரின் கழுத்தை கடித்து களேபரம் செய்தார்.  இந்நிலையில் போலீசை தாக்கிய தப்ப முயன்ற குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்ட நிலையில்,  அந்தப் பெண் நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த லிசா என்பதும் அவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் பின்னர் விசாரணையில் தெரியவந்தது.