நல்ல பாம்பை முத்தமிட முயன்ற பாம்பு பிடி வீரரை  பாம்பு  கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்நபர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .  பாம்பு என்றாலே  படையே நடுங்கும் என்பார்கள்,  அதிலும் நல்லபாம்பு என்றால் சொல்லவே தேவையில்லை பெயரைக் கேட்டாலே அதிரக் கூடிய அளவிற்கு அத்தனை கொடிய விஷம் நிறைந்தது நல்ல பாம்பு.  பெயரில் மட்டும் தான் நல்லது இருக்கிறதே தவிற  அத்தனையும் ஆபத்தான வகை  பாம்பாகும்.  

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பத்ராவதியில்  ஒரு வீட்டுக்குள் நல்ல பாம்பு நூழைந்து விட்டது.  அந்தப் பாம்பை பிடிக்க அந்த பகுதியில் உள்ள  பாம்புபிடி  வீரரான  சோனு என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது .  அப்போது அங்கு வந்த சோனு  வீட்டுக்குள் இருந்த பாம்மை கையால் லாவகமாக  பிடித்தார் .  பின்னர் அந்த பாம்புடன் சிறிது நேரம் அவர் சாவகாசமாக விளையாடிக் கொண்டிருந்தார் .  ஒரு கட்டத்தில் பாம்பின் உதட்டோடு உதட்டை வைத்து முத்தமிட  முயன்றார். அப்போது கையில் இருந்த பாம்பு  ஆத்திரத்தில் சோனுவின் உதட்டை வெடுக்கென கடித்து கவ்வியது.  இதில் விஷம் தலைக்கேற அங்கேயே  மயங்கி விழுந்தார் சோனு. அந்த  பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மாயமானது .

 

இதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள்  உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர் .  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனு  ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆனாலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . பாம்பு பிடி வீரர்கள் பாம்பை எப்போதும் பின்பக்கத்தில் இருந்தான் முத்தமிட வேண்டும் ,  ஆனால் போதிய அனுபவமில்லாத சோனு, தவறான முன்பக்கமிருந்து  முத்தமிட முயற்சி செய்து பாம்புகடி வாங்கிஇருக்கிறார் என்ன சக பாம்புபிடி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.