இரவில் வீட்டின் வாசல் முன்பு தூங்கிய சிறுவனை கண்டதுண்டமாக திண்றது சிறுத்தை .இச்சம்பவம் பெங்களூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அக்னி வெயில் மண்டையை பிளப்பது மட்டுமல்லாமல் மண்டை மூளையை உருகச் செய்யும் அளவிற்கு இருக்கிறது. இரவு நேரங்களில் வெப்பச்சலனம் மனிதர்களை தூங்கவிடாமல் பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது. பல கிராமங்களில் வெயில் காலங்களில் வீட்டு வாசல் முன்பு விரிப்பு விரித்து குடும்பத்தோடு இயற்கை காற்றோடு தூங்குவது வழக்கம். அப்படிதான் பெங்களுர் அருகே உள்ள கிராமத்தில் மக்கள் படுத்து தூங்கியிருக்கிறார்கள். அர்த்தசாமத்தில் எல்லோரும் கண்அசந்து தூங்கும் நேரத்தில் திடீரென சிறுத்தை வீட்டிற்குள் சத்தமில்லாமல் புகுந்து சிறுவனை தூக்கிச் சென்று பாதி உடலை திண்றுவிட்டு மீதமுள்ள பாதி உடலை போட்டுவிட்டுச் சென்றுள்ளது.


பெங்களூர் அருகே மகடி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமத்தில், உறங்கிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை தூக்கிச் சென்ற சிறுத்தை, அவனைக் கடித்துத் தின்றது. குழந்தையைக் காணமல் தேடிய பெற்றோர், பாதி உடலை கண்டெடுத்துள்ளனர். சிறுவனை தூக்கிச் சென்றுள்ளது.திடீரென பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணாத பெற்றோர், அக்கம் பக்கத்தில் குழந்தையைத் தேடினர். இந்த நிலையில்தான் வீட்டில் இருந்து சுமார் 60 மீட்டர் தூரத்தில் சிறுத்தை  பாதி கடித்துத் தின்ற நிலையில், குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.