Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு.. ஜெராக்ஸ் கடை உரிமையாளர்களுக்கு சரியான ஆப்பு வைத்த போலீஸ்..!

 கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பத்மநாபபுரம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் ராஜேஷ். இவர் தனது முகநூல் பதிவில் பள்ளிகள் திறப்பின் போது பள்ளி குழந்தைகளுடன் வகுப்பறையில் முதலமைச்சர் ஸ்டாலின் அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்து, முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து ஆபாசமாக அவதூறு கருத்தை பதிவிட்டிருந்தார். 

Slander on Facebook about the CM Stalin..Xerox shop owner absconding
Author
Kannivadi, First Published Jun 22, 2022, 7:43 AM IST

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்ட ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான, தரம் தாழ்ந்த கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இது அமைதியை சீர்குலைப்பதற்கும், குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன. இதனை தடுக்கும் விதத்தில் சமூக வலைதளங்கள் மூலமாக அவதூறுகள், ஆபாச தாக்குதல்கள் நடத்துபவர்கள் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

Slander on Facebook about the CM Stalin..Xerox shop owner absconding

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பத்மநாபபுரம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் ராஜேஷ். இவர் தனது முகநூல் பதிவில் பள்ளிகள் திறப்பின் போது பள்ளி குழந்தைகளுடன் வகுப்பறையில் முதலமைச்சர் ஸ்டாலின் அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்து, முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து ஆபாசமாக அவதூறு கருத்தை பதிவிட்டிருந்தார். 

Slander on Facebook about the CM Stalin..Xerox shop owner absconding

இது குறித்து குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணிஅமைப்பாளர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, அவதூறு கருத்து பதிவிட்ட ராஜேஷ் மீது சமூக ஊடகத்தை தவறாக பயன்படுத்துதல், அவதூறு கருத்துக்களை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios