என் பொண்டாட்டிய தப்பா பேசுறியா... ஃபுல் மப்பில் நண்பனை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற பயங்கரம்..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரபிக் (28). பனியன் நிறுவனத்தின் டெய்லராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. 

Slander about wife...youth brutal murder in tiruppur

திருப்பூரில் மனைவி பற்றி தவறாக பேசியதால் நண்பனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரபிக் (28). பனியன் நிறுவனத்தின் டெய்லராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ் (29) நண்பர்களான இருவரும் மது அருந்துவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் அருகே இருவரும் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். 

இதையும் படிங்க;- சென்னையில் ஊசிபோட்டு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்.. என்ன காரணம் தெரியுமா? சிக்கிய கடிதம்..!

அப்போது ரபிக் தனது நண்பன் முகமது இலியாஸின் மனைவியை தவறாக பேசியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முகமது இலியாஸ் தான் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து ரபிக் தலையில் பயங்கரமாக அடித்தார். மேலும் ஆத்திரம் தீராததால்  உடைந்த பாட்டிலை கொண்டு கழுத்து வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். 

இதையும் படிங்க;-  என்னையே பிடிக்க வரியா! கத்தியுடன் துரத்திய கஞ்சா கும்பல்! கத்தியபடி ஓடிய காவலர்.! வைரல் வீடியோ.!

இதில் படுகாயமடைந்த ரபிக் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது அங்கிருந்து முகமது இலியாஸ் தப்பி ஓடி விட்டார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரபிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்துவிட்டு வெளியூர் தப்பிச்செல்ல முயன்ற கமது இலியாசை கைது செய்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios