வேலைக்கார பெண்ணை சேர்த்து வைப்பதற்காக கொடுத்த 65 லட்சம் பணத்தை திருப்பி கேட்டவரை பெண் வக்கீல் கொலை செய்து சடலத்தை கடலில் வீசினார். இதுதொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பெண் வக்கீலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  சென்னை அடையாறு, இந்திரா நகர் முதல் அவென்யூவை சேர்ந்த சுரேஷ் பரத்வாஜ் திருமணம் ( 50 வயது )  ஆகாமல் சித்திகளுடன் வசித்து வந்துள்ளார். 

கடந்த ஜூன் 21ம் தேதி சுரேஷ் பரத்வாஜ் திடீரென மாயமானார். அவரது சித்தி புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த அடையாறு போலீசார் சுரேஷ் பரத்வாஜை தேடி வந்தனர். மாயமான அன்று சுரேஷ் செல்போனை வீட்டு கார் டிரைவரிடம் கொடுத்து சென்றுள்ளார்.  அந்த டிரைவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் அடையாறில் உள்ள வக்கீல் பிரீத்தி வீட்டுக்கு சென்றதாக சொல்லியுள்ளார்.பிரீத்தியிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். அவரது வீட்டு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அங்கு சுமார் ஒரு மணி நேரம் இருந்துவிட்டு ஆட்டோவில் எரிச் சென்றது தெரியவந்தது. 

ஆட்டோ எண்ணை வைத்து  டிரைவரிடம் விசாரித்தபோது சுரேஷை காசிமேடு பகுதியில் விட்டதாக கூறினார். இதற்கிடையே போலீசார் ப்ரீத்தியின் செல்போனை ஆய்வு செய்தபோது காசிமேட்டை சேர்ந்த குடும்பி பிரகாஷ் என்பவருடன் பேசி வந்தது தெரியவந்துள்ளது. எனவே அவரை போலீசார் நேற்று மடக்கி  விசாரித்ததில் சுரேஷ் வீட்டில் வேலை செய்த சித்ரா என்ற பெண்ணை காதலித்துள்ளார். அவரை அடைய கொஞ்சம் கொஞ்சமாக  4 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். ஒரு நாள் வேலைக்கார பெண்ணிடம் சுரேஷ்  உல்லாசமாக இருக்க முயன்றதால் அவர் வேலைக்கு வராமல் நின்றுள்ளார். சுரேஷ் தான் கொடுத்த கடனை சித்ராவிடம் திருப்பி கேட்டபோது அவர் தர மறுத்ததால் வக்கீல் ப்ரீத்தியிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு ப்ரீத்தி வேலைக்காரி சித்ராவை அவருடன் சேர்த்து வைப்பதாக சொல்லி சுமார்  ₹65 லட்சம் வாங்கியிருக்கிறார். ஆனால் வேலைக்காரி சித்ராவை வக்கீல் ப்ரீத்தி சேர்த்து வைக்காததால் அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். 

இதனால் பிரீத்தி கடந்த ஜூன் 21ம் தேதி அவரை சுரேஷை பிரகாஷுடன் சேர்ந்து திட்டம் தீட்டி சுரேஷிடம் சித்ராவை சம்மதிக்க வைத்துள்ளதாகவும் செல்போனை வைத்துவிட்டு தனியாக வரவழைத்து காசிமேட்டில் பிரகாஷ் மற்றும் 5 பேரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் 7 பேரும் சேர்ந்து சுரேஷுடன் படகில் 8 கிமீ தூரம் கடலுக்குள் சென்றுள்ளனர். பின்னர், அவரை அடித்து கொன்று சடலத்தை கடலில் வீசிவிட்டு வந்துள்ளது தெரிகிறது. எனவே போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் காசிமேடு சேர்ந்த சுரேஷ், மனோகர், சந்துரு, ராஜா, சதீஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான பெண் வக்கீல் ப்ரீத்தியை போலீசார் தேடி வருகின்றனர்.