நள்ளிரவில் போலீசாருக்கு போன் செய்து பீர் கேட்ட இளைஞரை மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நள்ளிரவில் போலீசாருக்கு போன் செய்து பீர் கேட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
போதை அதிகமாகி விட்டால் குடிமகன்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இருக்காது என்று சொல்லலாம். நடுரோட்டில் நடனமாடுவது, சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து இடையூறு செய்வது, சத்தமாக பாடுவதே போன்ற எண்ணற்ற சம்பவங்களை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. சமீபத்தில் மதுபோதையில் குடிமகன் ஒருவன் செல்போன் டவர் மீது ஏறி சிக்னல் எப்போது வரும் சார் என போலீசாரை கேட்ட சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்தது. ஆனால் இங்கு ஒரு நபர் நள்ளிரவில் போலீசுக்கு போன் செய்து ரெண்டு பீர் கிடைக்குமா என கெஞ்சியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

இதில் கோபம் அடைந்த போலீசார் அந்த வாலிபனை தூக்கிச்சென்று நையப்யப்புடைத்துள்ள உள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் ஆந்திர மாநிலம் தௌலதாபாத் மண்டலத்தில் உள்ள கோகஃபசல்வாட் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜானிகோலா மது என்ற வாலிபர் வேலை முடித்து விட்டு வந்து இரவில் குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் நன்கு மது அருந்தியிருந்த நிலையில், போதைக் தலைக்கேறிய நள்ளிரவில் 100-க்கு போன்செய்தார். எதிர் முனையில் போலீசார் போன் எடுத்ததும் சார் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, நீங்க இங்க கொஞ்சம் வரணும் சார் எனக்கு பீர் வேண்டும் சார் என கூறியுள்ளார்.

இதனால் இளைஞருக்கு ஏதோ ஆபத்து என எண்ணிய போலீசார் என்னானதோ ஏதானதோ என பதறியடித்து அந்த இளைஞன் இருக்குமிடம் தேடி வந்தனர். பின்னர் அங்கு சென்று பார்த்தபோது அந்த இளைஞர் மது போதையில் இருந்துள்ளார். அங்கு வந்த போலீசாரிடம் சார் எனக்கு இரண்டு பீர் கிடைக்குமா தயவுசெய்து அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என கூறி போலீசாரை கிண்டல் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் அந்த இளைஞனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 100க்கு போன் செய்து போலீசாரின் நேரத்தை வீணடித்ததாக அந்த இளைஞன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞனின் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
