Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் ஜெயகுமாரை டுவிட்டரில் கலாய்த்த சிங்கப்பூர் இளைஞர் !! சொந்த ஊருக்கு வந்தபோது ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!

சிங்கப்பூரில் வேலைபார்த்து வந்த தமிழக இளைஞர் ஒருவர்  தனது டுவிட்டரில் அமைச்சர் ஜெயகுமாரை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் விமானத்தில் வந்திறங்கியபோது  அவரை போலீசார் கைது செய்தனர்,

 

singapore man arrest by tn police for minister jayakumar
Author
Chennai, First Published Nov 4, 2018, 7:28 AM IST

கடலூரைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் சிங்கப்பூரில் வெல்டிங் தொழிலில் செய்து வருகிறார். அவர் அங்கிருந்தபடியே தனது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் ஜெயகுமாரை விமர்சனம் செய்துவந்தார்.

இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சிக்கும் வகையில் இருந்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் அப்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. எனினும் வீரமுத்து சிங்கப்பூரில் வெல்டிங் தொழில் செய்து வந்ததால் அவரை கைது செய்ய முடியவில்லை

singapore man arrest by tn police for minister jayakumar

இந்நிலையில் வீரமுத்து தனது சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக நேற்று சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.வீரமுத்து சென்னைந வருவதை அறிந்து கொண் சென்னை சைபர் கிரைம் போலீசார் ஸ்கெட்ச் போட்டு ரெடியாக இருந்தனர்,

இதையடுத்து  நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த வீரமுத்துவை . விமான நிலையத்திலேயே கைது செய்த சைபர் கிரைம் போலீஸார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

singapore man arrest by tn police for minister jayakumar

நீதிபதி பிராகஷ் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தான் செய்தது தவறுதான் என வீரமுத்து மன்னிப்பு கோரினார் மன்னிப்பை ஏற்றுகொண்ட நீதிபதி செய்த தவறுக்கு ஊடகத்தின் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் வீரமுத்துவிற்கு ஜாமீன் வழங்கினார். வீரமுத்துவும் ஊடகத்தின் முன்பும் கை கூப்பி மன்னிப்பு கேட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios