கஞ்சா விற்பனை மோதல்.. வாலிபர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. பதற்றத்தால் போலீஸ் குவிப்பு..!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த தண்டுமாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் என்கிற மண்டை பிரவீன்(25). வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த தண்டுமாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் என்கிற மண்டை பிரவீன்(25). வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சோழவரம் அடுத்த பூதூர் பகுதியில் உள்ள ஏரியில் பிரவீன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- உடலில் சூடு! குண்டூசியால் குத்தி சித்திரவதை செய்து குழந்தை கொலை.. காமவெறி பிடித்த தாய் சிக்கியது எப்படி?
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கஞ்சா விற்பனை மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க;- சினிமா பாணியில் நடந்த பயங்கரம்.. ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட விரட்டி படுகொலை..!
இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.