Asianet News TamilAsianet News Tamil

ரூ.500க்காக இரண்டு நர்சுகளுக்குள் செருப்படி தாக்குதல்... மருத்துவமனைக்குள் குடுமிபிடி... வைரலாகும் வீடியோ..!

இருவரும் ஒருவரையொருவர் கை மற்றும் செருப்பால் அடிக்க தொடர்ந்து முயன்றனர்.

Shoe attack on two nurses for Rs.500 ... Family inside the hospital ... Video goes viral
Author
Bihar, First Published Jan 24, 2022, 4:11 PM IST

பீகாரின் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் ரூ.500 க்காக சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ ஆன்லைனில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.


ஜமுய்யின் லக்ஷ்மிபூர் பிளாக்கில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து நடந்த சம்பவத்தின் காட்சியில் ஒரு ஆண் தலையிட்டு அவர்களைத் தடுக்க முயன்றபோது, ​​இரண்டு பெண் சுகாதாரப் பணியாளர்கள் ஒருவரையொருவர் முடியைப் பிடித்து இழுக்கும் காட்சி அமைந்துள்ளது.  இருப்பினும், இருவரும் ஒருவரையொருவர் கை மற்றும் செருப்பால் அடிக்க தொடர்ந்து முயன்றனர்.

 

ஞாயிற்றுக்கிழமை ஆஷா பணியாளர் ரிந்து குமாரி என்பவருக்கு புதிதாகப் பிறந்த குழந்தையை உதவி செவிலியர் ரஞ்சனா குமாரிடம் பிசிஜி தடுப்பூசி செலுத்த (குழந்தைகளுக்கு காசநோய் தடுக்கப் பயன்படுகிறது) எடுத்துச் சென்றதை அடுத்து சண்டை வெடித்தது.

இருப்பினும்,  ஊழியர் தடுப்பூசி போடுவதற்கு ₹ 500 கேட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதைத் தொடர்ந்து வாக்குவாதம் தொடங்கி மகப்பேறு வார்டு அருகே இரண்டு சுகாதார ஊழியர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மருத்துவமனையின் மூத்த அதிகாரிகள் இது குறித்து விசாரணையை தொடங்கினர். ஊழியர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இந்த மாத தொடக்கத்தில், ஜமுய்யில் உள்ள மருத்துவமனை ஊழியர் ஒருவர் உதவி செவிலியர் மற்றும் மருத்துவர் இல்லாததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்கும் வீடியோ வைரலாக பரவியது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios