பள்ளி ஆசிரியரின் ஒழுங்கீன செயல் குறித்து முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவுக்கு தகவல் தெரிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் உறுதியானதை அடுத்து  ஆசிரியர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நன்னாட்டாம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் பாபு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுட்டதை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் நன்னட்டாம்பாளையத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக வளவனூரை சார்ந்த பாபு என்பவர் பணியாற்றி வந்தார். இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் ஆசிரியர் பாபு பள்ளியில் பயிலும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் அடிக்கடி ஈடுபட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சர்ச்சில் வைத்து பாதிரியார் செய்த கேவலமான செயல்.. கதறிய சிறுமி..!

இந்நிலையில், ஏப்ரல் 22ம் தேதி வெள்ளிக்கிழமை அரசு பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் பாபு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து, கிராம மக்களை அழைத்து சென்று பள்ளி ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பள்ளி ஆசிரியரின் ஒழுங்கீன செயல் குறித்து முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவுக்கு தகவல் தெரிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் உறுதியானதை அடுத்து ஆசிரியர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க;- வாயில் துணியை வைத்து 11ம் வகுப்பு மாணவி கதற கதற பலாத்காரம்.. புருஷனுக்காக அத்தை செய்த வேலையை பார்த்தீங்களா?