நான் உங்க ஸ்டுடென்ட் சார்! இப்படி எல்லாம் செய்யாதீங்க! மாணவிகளுக்கு டார்ச்சர் கொடுத்த பயிற்சியாளருக்கு ஆப்பு.!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அரசு விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மாணவிகளுக்கு தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளராக கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். இவர் தன்னிடம் பயிற்சி பெறும் பள்ளி மாணவிகளிடம் கடந்த ஓராண்டாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
பெரம்பலூர் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அரசு விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மாணவிகளுக்கு தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளராக கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். இவர் தன்னிடம் பயிற்சி பெறும் பள்ளி மாணவிகளிடம் கடந்த ஓராண்டாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்ட நன்னடத்தை அலுவலர் கோபிநாத்துக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணை நடத்தினர். இதில், விளையாட்டு விடுதி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோபிநாத் கடந்த 7ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் தர்மராஜன் மீதும், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் தலைமறைவானார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பதுங்கியிருந்த தர்மராஜனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் தலைமறைவாகியுள்ள மற்றொரு குற்றவாளியான மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.