எஸ்.என்.எஸ். கல்லூரி நிர்வாகி சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பெண், கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 

கோவையை அடுத்த சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி வயது 23. திருமணம் ஆகாத இவர், எஸ்.என்.எஸ். கல்லூரியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார். கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அதன் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன் (63) அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

 

இளம் பெண்களிடம், சுப்பிரமணியன் தொடர்ந்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சிலர் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். இவரது சில்மிஷம் தாங்க முடியாது, சிலர் வேலையை விட்டு நின்றும் உள்ளனர். 

சுப்பிரமணியத்தின் சில்மிஷம் குறித்து, இளம் பெண்கள், சுப்பிரமணியத்தின் மகனும், கல்லூரியின் தலைமை நிர்வாகியுமான நளினிடம் புகார் கூறியுள்ளனர். அதற்கு நளின் சொன்னதோ, வெளிநாட்டில் பெண்களை கட்டிப்பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் மிகப்பெரிய விஷயம் அல்ல என்று எகத்தாளமாக பேசியுள்ளார். மேலும், புகார் கூற வந்த பெண்களிடம், போய் வேலையைப் பாருங்கள்... இல்லையென்றால் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

 

நளினியின் பேச்சால் மனரீதியாக பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி என்ற இளம் பெண், சுப்பிரமணியத்தின் பாலியல் தொந்தரவுகளை கேமராக்கள் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம், புவனேஸ்வரியை வேலையை விட்டு நிறுத்தியதுடன், அவருக்கு பல்வேறு வகைகளில் தொந்தரவும் கொடுத்து வந்துள்ளார்.

இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி, செக்ஸ் சில்டிமிஷம் கொடுத்த நிர்வாக இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கோவையை அடுத்த துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.