கல்லூரி மாணவியுடன் நிர்வாண வீடியோ கால்.. ஆபாச சைகைகள்.. கல்லூரி சேர்மன் பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்.!
கல்லூரியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியின் சேர்மேன் முன்னாள் பாஜக சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் இருந்து வருகிறார்.
தனியார் கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவியுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசிய விவகாரத்தில் பாஜக பிரமுகரும் கல்லூரி சேர்மனுமான தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியின் சேர்மேன் முன்னாள் பாஜக சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் இருந்து வருகிறார்.
இவர் தனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் கல்லூரியின் தாளாளர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி அவரிகளிடம் அருவருக்கதக்க வகையில் மிகத் தவறாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அங்கே பயிலும் ஒரு மாணவியுடன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக தாஸ்வின் அந்த மாணவியின் உடலில் ஒட்டுத் துணியில்லாமல் நிர்வாணமாக நிற்கச் சொல்லி வீடியோ காலில் பேசியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ, தற்போது அங்கே படித்து வரும் மாணவிகளிடம் திடீரென பரவியதால் மாணவிகளும் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். விடுமுறை நாள் என்பதால், கல்லூரி மூடப்பட்டிருந்ததால் கல்லூரிக்கு வந்த மாணவிகள் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் ஏற்படுத்தியதை அடுத்து கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததைத் தொடர்ந்து, வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புதல் என 2 பிரிவுகளின் கீழ் அருப்புக் கோட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனையடுத்து, திருவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், தாஸ்வின் ஜான் கிரேஸ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தாஸ்வின் ஜான் கிரேஸ் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சார்ந்த M.தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் கட்சி பொறுப்பில் சரியாக செயல்படாத காரணத்தினால் மூன்று மாதங்களுக்கு முன்பு கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். நேற்று பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாக அறியப்பட்ட செய்தியின் அடிப்படையில் அவரை பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார் என்பதனை இதன் வாயிலாக தெரிவித்துகொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.