தன் அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி மீது பெண் ஒருவர் கொடுத்த புகாரின்  பேரில் பஞ்சாப் மாநில போலீசார் அந்த அதிகாரிமீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்துள்ளனர்.அத்துடன் அவர்  தன்னை மிரட்டி  நகை, பணம்  உள்ளிட்டவர்களையும் அபகரித்துக்கொண்டார் எனவும் அந்த பெண் புகார் கூறியுள்ளார்.

 

கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலம் குருக்ஷேத்ராவைச் சேர்ந்த 38 வயதுடைய இளம்பெண் ஒருவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார் அதில்,  லஞ்ச ஒழிப்புத்துறையில்  ஏஐஜியாக உள்ள ஆஷிஷ் கபூர் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு மொஹாலியில் உள்ள ஜிராக்பூர் காவல் நிலையத்தில் தனக்கு எதிராக ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்தார் என்றும். அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கவும்  அடிக்கடி மிரட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அந்த அதிகாரி தன்னிடமிருந்த 3.50 லட்சம் ரூபாய்  பணம்,  மற்றும் 550 கிராம் தங்க நகைகளை சூரையாடிதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிகாரி ஆஷிஷ் கபூர், அவரது மனைவி கமல் கபூர் முன்னிலையில் தன்னை சித்திரவதை செய்ததுடன், தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்  தனக்கு தொல்லை கொடுத்தார் என அதில் குற்றம்சாட்டியுள்ளார். எனவே தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பெண்  புகார் கேட்டுக்கொண்டிருந்தார்.இதனை அடுத்து அந்த புகார் மனுவை விசாரித்த போலீசார் அதில் உண்மையிருப்பது அறிந்து லஞ்ச ஒழிப்புத்துறை ஏஐஜி ஆஷிஷ் கபூர் மீது பெண்கள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.