புரட்சிப் பெண்ணாக வலம் வந்த உடுமலை சங்கரின் முன்னாள் மனைவி கவுசல்யா சக்தியை திருமணம் செய்த பின் வகைவகையான வம்புகளில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார். அனைத்துக்கும் சக்தியின் பாலியல் சீண்டல்களே காரணம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

வேறு சாதி இளைஞரான சங்கரை, கௌசல்யா திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினரால் சங்கர் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதற்கு காரணமாக இருந்த தனது குடும்பத்தினருக்கு சட்டரீதியாக தண்டனை வாங்கிகொடுத்தார். சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால் புரட்சிப் பெண்ணாக போற்றப்பட்டார் கவுசல்யா.

 

அடுத்து சமீபத்தில் கோவை வெள்ளலூரைச் சேர்ந்த நிமிர்வு கலையக ஒருங்கிணப்பாளரான சக்தியை சாதி மறுப்பு மறுமணம் செய்துகொண்டார். அப்போது ஆரம்பித்த வம்பு வழக்குகள் கவுசல்யாவுக்கு சவுக்கடி கொடுத்து வருகின்றன. சக்தி ஏற்கெனவே திருநங்கை உட்பட பல பெண்களை ஏமாற்றியதும், ஒரு பெண்ணுடன் பல மாதங்கள் குடும்பம் நடத்தி 6 மாத கருக்கலைப்பு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் கிளர்ந்தெழுந்தன. இதனையடுத்து கொளத்தூர் மணி, தியாகு ஆகிய சமூகப்போராளிகள் கட்டப்பஞ்சாயத்து பேசி பிரச்னைகளின் வீரியத்தை குறைக்க முயன்றனர். ஆனால், மாறாக அது வெடித்துக் கிளம்பி சக்தியில் முகத்திரையை கிழித்து தொங்க விட்டு வருகிறது.

 
 
அந்த வகையில் சக்தியால் பாதிக்கப்பட்ட திருநங்கை ஒருவர் கவுசல்யாவிடம் போனில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் கவுசல்யாவும், திருநங்கையும் பேசிக் கொண்ட பதிவு இது.

திருநங்கை: என்ன கவுசு போனை எடுக்க மாட்டேங்குறான். 

கவுசல்யா: நான் ஆபீஸ்ல இருக்குறேன்னு சொல்றேன்ல. 

திருநங்கை: சரி நீங்க ரெண்டு பேரும் இப்ப பேசிட்டு இருந்தீங்கள்ல 

கவுசல்யா: நான் தியாகு தோழர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். நீங்க கொளத்தூர் மணி தோழர்கிட்ட பேசிக்கோங்க. 

திருநங்கை: அவங்ககிட்ட நான் ஏன் பேசனும். நான் பேசுறதை முழுசா கேட்காம அவக்கதான் கட் பண்ணிட்டாங்களே...

கவுசல்யா: அப்படியா... நீங்க தியாகுகிட்ட பேசிக்கோங்க... 

திருநங்கை: சக்திய எனக்கு பேசச் சொல்லு..  அவன் தானே அவதூறு பரப்பினதா போட்டிருக்கான்... என்கிட்ட சக்தியை பேசச் சொல்லு..

கவுசல்யா: நீங்க அவங்ககிட்ட பேசிக்கோங்க...

திருநங்கை: நான் எதுக்கு அவங்ககிட்ட பேசனும்... எனக்கு வீடியோ காட்டினது உன் புருஷன் தானே காண்பிச்சான்..

கவுசல்யா: நான் ஆபீஸ்ல இருக்கேன் என்னால எதுவும் பேச முடியாது...

திருநங்கை: அப்ப அவன பேசச் சொல்லு.. நான் எல்லாம் உனக்காகத் தானேடி பண்ணினேன். என்ன அறிமுகப்படுத்தினப்போ சக்தி என்ன? எப்படி அவன்னு என்கிட்டயும், ஜீவானந்தம் கிட்டேயும் கேட்டது நீதானே கல்யாணத்துக்கு அப்புறம் நான் சொன்னா அவதூறுனு சொல்லிருகலாம். அவன் உன் ப்ரண்டா இருக்குறப்போதானே இந்த மாதிரி பையன்கிட்ட நீ எப்படி பழகுறேன்னு சொன்னேன். 


கவுசல்யா: சரி நான் வைக்கிறேன் உங்ககிட்ட பேசுறதுக்கு இந்த சூழல் சரியானது இல்ல. 

திருநங்கை: ஏன்..?

கவுசல்யா: எதுவா இருந்தாலும் தியாகு தோழர்கிட்ட பேசிக்கோ... இதுக்கப்புறம் நான் எதுக்கும் பதில் சொல்ல விரும்பல..

திருநங்கை: அந்தப்பையன பேசச் சொல்லு கவுசல்யா... 

கவுசல்யா: எதுவா இருந்தாலும் தியாகு தோழர்கிட்ட பேசிக்கோங்க...

திருநங்கை: அவதூறுனு அவன் சொல்லிருக்கான்.. எதுக்காக சொன்னான் அவதூறுனு..? ஒரு நிமிஷம் பேசச் சொல்லு சக்திய.. அவன் தானே அம்மணமா காண்பிச்சான்... என் முன்னாடி என்னாத்துக்கு காண்பிச்சான்..? அவனுக்கு அரிப்பா... மத்த பொண்ணுங்ககிட்ட போகாம என்கிட்ட எதுக்கு வந்தான்..?

கவுசல்யா: எதுவா இருந்தாலும் தியாகு சார்கிட்ட பேசிக்கோங்க... 

திருநங்கை: நான் எதுக்குடி அவர்கிட்ட பேசணும்... அவதூறு பரப்புறதா சொன்னது உன் புருஷன் தானே... 

கவுசல்யா:நான் வைக்கிறேன் நீ எதுவா இருந்தாலும் அவர் கிட்ட பேசிக்கோ...’’ என முடிகிறது அந்த ஆடியோ. சக்தி மீது மேலும் பல்வேறு பாலியல் புகார்கள் குவிந்து வருவதால் கவுசல்யாவின் புகழ் நாளுக்கு நாள் களங்கமாகி வருகிறது.