தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி அனைத்திந்திய இந்துமகா சபாவின் தலைவர் மீது அக்கட்சியின் பெண் மாநிலச் செயலாளர் கொடுத்துள்ள புகாரை யடுத்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் அனைத்திந்திய இந்து மகாசபை அலுவலகம் இயங்கி வருகிறது அக்கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்து வருகிறார் ஸ்ரீகண்டன்( 50 )  இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்நிலையில்  ரஞ்சனி என்ற பெண் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகண்டன் மீது பாலியல்  புகார் ஒன்றை அளித்துள்ளார்.  அதில், அவர் தெரிவித்துள்ளதாவது,  

திருவள்ளுவர் பகுதியைச் சேர்ந்த நான்,  கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அனைத்து இந்திய இந்து மகாசபாவில் மகளிர் பிரிவில் மாநில செயலாளராக உள்ளேன்,  டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தேன் .  இந்நிலையில் அக்கட்சியின் தலைவராக உள்ள ஸ்ரீகண்டனுடன்  நெருக்கம் ஏற்பட்டது ,  அவர் கட்சி பணி தொடர்பாக  டெல்லிக்கு  செல்லும்போதெல்லாம் அவருக்கு மொழி பிரச்சினை என்பதால்  அவருடன் நானும் சென்று வந்தேன் இதற்காக தனக்கு கமிஷன் தொகை மொத்தம் பயணச் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக அவர்  வாக்குறுதி அளித்ததால் , அவரை நம்பி சென்றேன் ,  பின்னர் டெல்லி செல்லும் போதெல்லாம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் .  என்னை கல்யாணம்  செய்ய விரும்புவதாகக் கூறி வற்புறுத்தினார்,   இதனால் அவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் நான் வேலையை ராஜினாமா செய்தேன். 

ஆனால் என்னுடைய குடும்பத்தாரிடம் என்னைப் பற்றி மிகவும் இழிவாக கருத்துக்களை  ஸ்ரீகண்டன் பரப்பி வருகிறார் , தன்னை மறுபடியும் வேலையில் சேரச் சொல்லி எனது குடும்பத்தினரை மிரட்டி வருகிறார் .  அவர் பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார் .  எனவே என்னுடைய  உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் அந்தக் புகாரில் தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் ஸ்ரீகண்டன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ,  புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .