கடலூர் அருகே பல ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த கள்ளக்காதலனை அடித்து கொலை செய்து செப்டிக் டேங்கில் வீசிய பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தமுக்காணி முட்டம் பகுதியை சேர்ந்தவர் பூராசாமி(வயது 46). இவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அய்யாபிள்ளை என்பவரும், பரிமளா என்ற பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த 13-ம் தேதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தின் காரணமாக தள்ளிவிட்டதில் கீழே விழுந்த அய்யாப்பிள்ளை, தலையில் அடிப்பட்டு மயங்கியுள்ளார். அவர் உயிரிழந்துவிட்டதாக எண்ணிய பரிமளா, உடலை வீட்டின் கழிவுநீர் தொட்டியில் போட்டு மூடியுள்ளார்.

 

இதனையடுத்து அய்யா பிள்ளையின் சகோதரர் தனது சகோதரர் காணவில்லை என வடலூர் காவல்நிலயத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அய்யாப்பிள்ளையை கொலை செய்ததை பரிமளா ஒப்புக்கொண்டார்.

 

இதனையடுத்து அய்யாப்பிள்ளையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிமளாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.