இளநிலை பொறியாளர் சர்மா, ‘நீ விரும்பிய இடத்துக்கு மாற்ற வேண்டுமானால் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும். மேலும் உன்னுடைய மனைவியை என்னுடயை வீட்டுக்கு ஒரு நாள் இரவு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளார். அப்போது இன்னொரு ஊழியர் ஜெகத்பாலும் இருந்துள்ளார். இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இளநிலை பொறியாளர் சர்மா வீட்டுக்கு கோகுல் சென்றார்.
இடமாற்றம் கேட்ட மின்வாரிய ஊழியரிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு ஒரு இரவுக்கு மனைவியை அனுப்ப சொன்ன அதிகாரியால் விரக்தி அடைந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரிய ஊழியர்
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லியா உதவி மின்வாரிய பொறியாளர் அலுவலகத்தில் லைன் மேன் ஆக வேலை பார்த்தவர் கோகுல் (42). சில நாட்களுக்கு முன் இவரை அலிகன்ஜ் பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். இதையடுத்து தனக்கு வேறு பகுதியில் இடமாற்றம் கோரி இளநிலை பொறியாளர் நாகேந்திர சர்மாவிடம் கோகுல் கேட்டுள்ளார்.
ஒரு நைட்டுக்கு மனைவியை கேட்ட அதிகாரி
அதற்கு இளநிலை பொறியாளர் சர்மா, ‘நீ விரும்பிய இடத்துக்கு மாற்ற வேண்டுமானால் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும். மேலும் உன்னுடைய மனைவியை என்னுடயை வீட்டுக்கு ஒரு நாள் இரவு அனுப்பி வைக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளார். அப்போது இன்னொரு ஊழியர் ஜெகத்பாலும் இருந்துள்ளார். இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இளநிலை பொறியாளர் சர்மா வீட்டுக்கு கோகுல் சென்றார்.
விரக்தியில் தற்கொலை
அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது, கோகுல் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். வலி தாங்க முடியாமல் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சர்மா,ஜெகத்பால் இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, தற்கொலைக்கு தூண்டிய சர்மா,ஜெகத்பால் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- அரசு பஸ்ஸில் போன ஐஏஎஸ் மாணவி.. பின் பக்கமாக தொட்டு ஓயாத பாலியல் தொந்தரவு.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
