குடித்துவிட்டு வந்து ஜெய்ஹிந்த் தேவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நெய்வேலி தெர்மல் ஸ்டேஷன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த் தேவி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவிரிப்பாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரிந்துவந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த் தேவி, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நெய்வேலி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அவர், இன்று லீவு எடுத்துக்கொண்டு நேற்றிரவு நெய்வேலியிலிருந்து பேருந்தில் புறப்பட்டார். பேருந்தை விட்டு இறங்கும் முன் தனது கணவர் மாணிக்கவேலை செல்போனில் தொடர்புகொண்டு திண்டிவனத்தில் காத்திருக்கும்படி தெரிவித்தார்.

கணவரும் காத்திருந்தார், ஜெய்ஹிந்த் தேவி வந்ததும் கணவரோடு நேராக காவிரிப்பாக்கம் வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டிற்கு போகும் வழியிலேயே கணவரும் டிபன் வாங்கி வந்துள்ளார். ஒன்றாக இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே, கணவன் மாணிக்கவேல் சந்தேக வார்த்தைகளால் அசிங்க அசிங்கமாக திட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனையடுத்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான ஜெய்ஹிந்த் தேவி தற்கொலை செய்துகொள்ளும் முடிவிற்கு வந்துள்ளார். 

இந்நிலையில், ஜெய்ஹிந்த் தேவியின் அம்மா, பிள்ளைகள் வீட்டிலிருந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டார். தனது 2 மகள்களான அபிதா, அக்‌ஷ்யா, ஜெய்ஹிந்த் தேவியின் அம்மா, அக்கா குடும்பங்கள் திருப்பதி வெங்கடாசல பெருமாள் தரிசனத்திற்கு சென்றுவிட்ட நேரத்தில் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார் ஜெய்ஹிந்த் தேவி.