Asianet News TamilAsianet News Tamil

அப்பார்ட்மெண்டில் ஆபீஸரும், அம்மணியும்!! அந்த நேரத்தில் உள்ளே வந்த முன்னாள் கணவர்!! நடந்தது என்ன?

மரியாதைக்கு வஞ்சனையில்லாத மாவட்டத்தை சேர்ந்த போலீஸு அதிகாரி அவரு. முறுக்கு மீசையும், மிடுக்குப் பார்வையுமா அவரு ஜீப்புல ஏறி வலம் வர்றதைப் பார்க்கிறப்ப கபாலி, கண்ணாயிரம், சலீமு, அந்தோணிகளுக்கு பேஸ்மெண்டு ஆட ஆரம்பிச்சுடும். 

Secrets revealed police officer love story
Author
Chennai, First Published Oct 8, 2018, 10:22 AM IST

அதிரடி ஆக்‌ஷனில் மட்டுமல்ல, ஆல்டைம் நேர்மையிலும் அதிகாரியை மிஞ்சிக்க ஆளே இல்லை. மாமூலா தினமும் வரும் தொகைகளை வாங்கிப் பதுக்கிக் கொண்டாலே இந்நேரத்துக்கு கோடிகளில் குளித்து, லட்சங்களில் தலை துவட்டிக் கொள்ளலாம். ஆனாலும் அதிகாரி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு, ஸ்ட்ரிக்ட்டு, ஸ்ட்ரிக்ட்டு. 

அவரோட கேரக்டரை பற்றி விமர்சனம் பண்ண, நியாய தராசுல ஒரு பக்கம் அவரோட நேர்மை, அறிவு, அதிரடிகளை வெச்சாக்க அது அப்படியே வெயிட்டேறி கிழே இறங்கும். அதேநேரத்துல இன்னொரு பக்கம் அவரோட வீக்னஸ் பாயிண்ட் ஒண்ணை எடுத்து வெச்சோமுன்னு வையுங்க, தராசு டமாசாகி, அவரோட கெத்து டம்மி பீஸாகிடும். 

அது என்ன வீக்னஸ் தெரியுமா? அதான் அதான் அதேதான்....

கூட வேலை பார்க்கிற போலீஸ் நங்கைகள் மேலே கை வைக்கிறது, அவங்களுக்கு ரூட் விடுறது இந்த மாதிரி வேலையெல்லாம் பார்க்கவே மாட்டாரு. அவங்ககிட்ட இவரு மாதிரி ஒரு குட் ஆபீஸரு யாருமே கிடையாது. 

ஆனால்! திருடு போயிடுச்சுன்னு புகார் கொடுக்க, புருஷன் டார்ச்சர் பண்றான்னு கம்ப்ளைண்ட் கொடுக்க ஸ்டேஷன் பக்கம் ஒதுங்குற லேடீஸில் இவருக்கு பிடிச்சா மாதிரி யாராச்சும் இருந்துட்டா போதும், கதை கந்தல். அவங்க இவர் ஸ்டேஷனுக்கு வராம, பக்கத்துல இருக்கிற அனைத்து மகளிர் ஸ்டேஷன் போனாலும் கூட மனுஷன் கூப்பிட்டு வெச்சு என்கொயரிங்கிற பெயர்ல ஏகத்துக்கும் வழிஞ்சிடுவாரு. 

இப்படித்தான் ஒரு தடவை ஒரு லெக்சரர் லேடி, புருஷன் கூட பிரச்னைன்னு ஸ்டேஷனுக்கு வந்துச்சு. விசாரிச்சு பார்த்தா பஞ்சாயத்துக்கு காரணமே அந்தம்மாதான். புருஷன் மேலே எந்த தப்புமில்லை. ஊரே உரக்க சொல்லும்....’அப்புராணிய்யா அந்த மனுஷன்’ன்னு. 

ஆனால், நம்ம அதிகாரியின் கோர்ட்டில் அவருக்கு பிடிச்ச பொம்பளைங்க எல்லாமே நல்லவங்கதானே. அதனால விசாரணைங்கிற பெயர்ல அந்த புருஷனை, நல்ல மனுஷனை லெஃப்ட்டு ரைட்டு வாங்கி தெறிக்கவிட்டு ஓட வெச்சுட்டார். மனைவியே ‘போதும் சார்’ன்னு பொங்குற அளவுக்கு அடி வெளுத்துட்டார். நொந்து போன அந்த நல்ல புருஷன், போன கையோட  டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டார். 

இந்த சம்பவம் முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சு மெதுவா நலம் விசாரிக்கிறா மாதிரி நம்மாளு பிட்டுகளை போட ஆரம்பிச்சார். சாதாரண பேச்சுக்கள் பரந்து விரிஞ்சு பம்பரமா சுழன்று எங்கேயோ போயிடுச்சு. லெக்சரருக்கே ‘சில பாடங்களை’ எடுக்கிற அளவுக்கு கில்லாடி கிளாஸ் மாஸ்டர் ஆயிட்டார் நம்ம ஆபீஸர். ரெண்டு பேரும் சிட்டியில உட்காராத ஹைடெக் ரெஸ்டாரண்டே இல்லை. அப்டியிப்டியாகி வீடு வரைக்கும் வந்துடுச்சு நட்பு. 

வீட்டுக்குள்ளே போயி கதவை சாத்தின பிறகு அது வெறும் நட்பாவா இருக்க முடியும்? அம்மணியை ஷேம் ஷேம் பப்பி ஷேமா பண்ணிட்டார் அபீஸர். 

அவங்களுக்கும் இவரை ரொம்ப்ப்ப பிடிச்சுப் போக வாரம் இரண்டு மூன்று நாட்கள் அம்மணியோட பிளாட் இருக்கிற அப்பார்ட்மெண்டிலேயே மீட்டிங்குகள் தொடர்ந்தன. ரெண்டு பேரும் அம்மா-அப்பா ஆகிடாத அளவுக்கு சேஃப் அண்டு செக்யூர்டாக வேட்டையாடி விளையாடினார்கள் மயக்க, கிறக்கங்களை. 

பிரியாணி பொட்டலத்தை பொதச்சு வெச்சாலும் டாமி டக்குன்னு கண்டுபிடிச்சு நோண்டிடும்தானே!? அதேமாதிரி இந்த விவகாரம் வெளியாகி பரவி விரவி மாஜி புருஷன் காது வரைக்கும் போயிடுச்சு. எந்த தப்பும் செய்யாமல் புரட்டி எடுக்கப்பட்டதோடு, அழகு மனைவியையும் இழந்த ஆத்திரத்தில் அந்த சாது மிரண்டது! இனி காடு தாங்காதே. 

ஆமா ஆமா!. ஒரு நாள் நைட்டு அப்பார்ட்மெண்டினுள் ஆபீஸரும், அம்மணியும் டாடி மம்மி கேம் ஆடிக் கொண்டிருந்த நேரம். வந்தார் மாஜி கணவர்! தட்டினார் திறக்கவில்லை, சட்டுன்னு வெளியே இழுத்து போட்டார் ஒரு பூட்டை, அடுத்து உள்ளேயிருக்கும் மாஜி மனைவிக்கு போன் போட்டார். ஜன்னல் வழியே மெதுவாக ஸ்மெல் செய்துவிட்ட அம்மணிக்கு விஷயம் புரிஞ்சு போச்சு. ‘ஏனுங்க சொல்லுங்க’ என்று இழுத்தது. ‘ரெண்டு பேரும் கதவை திறங்க. ஊரை கூட்டி உப்புக்கண்டம் போடுறேன்’ என்று கொதித்தார் மாஜி கணவர். 

எத்தனையோ கிரிமினல்களை அவர்களின் கோட்டைக்குள்ளே போயி புரட்டி எடுத்த ஆபீஸர் சிங்கத்துக்கு, இந்த அதிரடி தாக்குதலில் அடிவயிறு கலங்கிவிட்டது. எப்படி தப்பிப்பது என்று புரியவில்லை. யோசித்தார், வேறு வழியேயில்லை! நான்கு மாடி அப்பார்ட்மெண்டில் மூணாவது மாடியில் இருக்கிறது தோழியின் வீடு. பால்கனிக்கு போய் நின்ற ஆபீஸர் அப்படியே ஒரு ஜம்ப் செய்தார் கீழே. 

இருட்டு தோட்டத்தில் முரட்டுத் தனமாய் குதித்ததில் கை, கால், முகம், முதுகு என சரக்கு சரக்கென ஏறியிறங்கின கண்ணாடிகளும், முள், கம்பிகளும். இடது கை இழுத்துக் கொண்டுவிட்டது. ரத்தம் சொட்டச்சொட்ட பக்கத்து வீதி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனார். 

ஹை ஆபீஸர் வந்து ‘எப்படிய்யா நடந்துச்சு இது?’ என்று கேட்டபோது, ‘பிக்பாக்கெட் ஒருத்தன் மாடியில ஏறி ஓடினான், பிடிக்கப்போனேன் ஸ்லிப் ஆயிட்டேன்.” என்று சமாளித்தார். டிரைவருக்குதான் சிரிப்பை அடக்க முடியவில்லை. 

ரெண்டு மாசம் கழிச்சுதான் ஆபீஸருக்கு தன் ஷூவை தானே போட குனிய முடிந்தது. இதில் கொடுமை என்னவென்றால் இவ்வளவு அடிபட்ட மனுஷனுக்கு ஒரு போன் பண்ணி, எப்படி இருக்கீங்க?ன்னு ஒரு வார்த்தை கூட கேட்கலை அந்த லெக்சரர் அம்மணி. 

ஹும்! இந்த பொம்பளைங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சா ஆபீஸர்?!

Follow Us:
Download App:
  • android
  • ios