அதைக் கைப்பற்றவே போலீஸ் அவரை நிழலாக தொடர்கிறது, சர்ச்சைகள் தொடர்கின்றன என்று தகவல் தடதடக்கிறது. 

இந்நிலையில், கூவத்தூரில் கருணாஸ் என்னென்ன செய்தார்? என்பது பற்றி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆரவாரமாய் வறுத்துத் தள்ளுகிறார் இப்படி... 

“கூவத்தூர் ரெசார்ட் சாதாரண ஒரு தங்கும் விடுதிதான். ஆனால் அரசு அமைக்க வேண்டியதற்காக நாங்கள் அங்கே முகாம் போட்டிருந்ததாலே அது முக்கியத்துவமானதாயிடுச்சு. 

நாங்களெல்லாம் காலையில அங்கே சைக்கிளிங், வாக்கிங்ன்னு பயிற்சியில இருந்தோம். குளிச்சுட்டு சாப்பிடுவது, ரெஸ்ட் எடுப்பதுன்னு இருந்தோம். பலர் சைவமும், சிலர் அசைவமும் சாப்பிட்டாங்க. ஆனால் கருணாஸ் ஒரு அசைவ விரும்பி. அதனால அவர் அசைவமாவே எப்பவும் சாப்பிட்டுட்டே இருந்தார். 

நாங்களெல்லாம் பவ்யமா பாத்ரூம்ல குளிச்சோம். ஆனா கருணாஸ் மட்டும் நீச்சல் குளத்துல குளிப்பாரு. நாங்க எல்லாரும் பத்து மணிக்கு தூங்கிடுவோம், ஆனா அவரு மட்டும் பனிரெண்டு மணி வரைக்கும் முழிச்சிருப்பார் அதுக்கு மேலேதான் கண் அசருவார். இப்படியெல்லாம் சொகுசாதான் அவரோட நாட்கள் அங்கே கழிஞ்சுது. இதுதான் கூவத்தூர் ரகசியம். ஆன இப்போ என்னமோ அவரு அப்படியே மாத்தி பேசிட்டு இருக்கிறார்.” என்று கருணாஸை காய்ச்சி எடுத்திருப்பவர், 

”இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர் நான் தான். இப்பவே அடிச்சு சொல்றேன், எட்டு முறை கழகம் வென்றுள்ள அங்கே இந்த முறையும் நாங்க நிச்சயம் வெல்வோம். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வது லட்சியம், ஐம்பதாயிரம் வித்தியாசம் நிச்சயம். 

அந்த தொகுதியில போட்டியிட தி.மு.க.வோ ஆளில்லாமல் தடுமாறுது. டி.டி.வி.யோ இப்போதான் உறுப்பினர் சேர்க்கைக்கு படாதபாடுபடுறார். இவங்களெல்லாம் என்னத்த நின்னு, ஜெயிச்சு?” என்று செமத்தியாக லந்தடித்திருக்கிறார். 

ஹும்! உதயகுமாரின் இந்த உரசலுக்கு கருணாஸ் என்ன வெடிகுண்டு பதில் சொல்லப்போகிறாரோ! என்பதை நினைத்தால்தான் ஜிவ்வ்வ்வுன்னு இருக்குது.