விதியை மீறி 7 மாடி கட்டடம் கட்டியதால் பிரபல ஆடைக்கடையான போத்தீஸ் நிறுவத்தின் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 

போத்தீஸ் ஆடைக்கடை சென்னை கோயம்புத்தூர், மதுரை நெல்லை உள்ளிட்ட பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது. நாகர்ர்கோவிலில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆடையகம் இயங்கி வருகிறது. இங்கு அனுமதியை மீறி 7 மாடி கட்டடம் கட்டப்பட்டது தொடர்பாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போத்தீஸ் நிறுவனம் சார்பில் தற்காலிக தடை பெறப்பட்டது. இந்த நிலையில் அந்த தற்காலிக தடை முடிவுக்கு வந்ததால் மாநகராட்சி சார்பில் போத்தீஸ் ஆடையகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.