டிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம் என்ற தகவலை கேட்டதுமே அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் பள்ளி ஆசிரியை லதா! திருபுவனம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டீச்சராக வேலை பார்ப்பவர் லதா. இவருக்கு 49 வயதாகிறது. 

கல்வி துறையில் பணி நிரவல் அடிப்படையில் கவுன்சிலிங் நடந்தது. இதில், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் மட்டும் 12 ஆசிரியர்கள் பணிநிரவல் அடிப்படையில் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். அப்போது, பணிநிரவல் அடிப்படையில் மூத்த ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 

ஆனால், பணிநிரவல் அடிப்படையில் டிரான்ஸ்பர் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தற்போது வேலை ஆர்த்துக்கொண்டிருக்கும் பள்ளிகளில் வருகிற நாளை கண்டிப்பாக பணியில் சேர வேண்டும் என்றும், இப்போது வேலை பார்த்து வரும் பள்ளிகளில் இருந்து அவர்களை விடுவித்து தலைமை ஆசிரியர் அதற்கான ஆர்டர் வழங்க வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஆசிரியை லதா பட்டுக்கோட்டை பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அவருக்கு தகவல் வந்துள்ளது. இதை கேட்டு லதா அதிர்ச்சி அடைந்த லதா, அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். அப்போது அதிர்ச்சியான வீட்டில் இருந்தவர்கள், லதாவை உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளனர்.

பேச்சு மூச்சு இல்லாமல் கொண்டுவரப்பட்ட ஆசிரியை லதாவை பரிசோதித்த டாக்டர்கள், லதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். லதா உயிரிழந்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.