16 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது பள்ளி மாணவியை கடந்த மாதம் 30ம் தேதி திடீரென காணவில்லை. பெற்றோர் உறவினர்கள் வீடு, தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அதனால், பதறிப்போன பெற்றோர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் வினோத் (26) சிறுமியை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர் சிறுமியை திருத்தணிக்கு கடத்தி சென்றம் தெரிவந்தது. இதற்கிடையே, அந்த சிறுமியை போலீசார் தேடுவதை அறிந்து கடந்த 4ம் தேதி வீட்டின் அருகே விட்டுவிட்டு வினோத் தலைமறைவானார்.

சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வினோத் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து போக்சோ வழக்காக மாற்றி கொளத்தூரில் பதுங்கியிருந்த  வினோத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.