Asianet News TamilAsianet News Tamil

ஆசைவார்த்தை கூறி ஆசைதீர உல்லாசம்.. மாணவியை கர்ப்பமாக்கிய காமக்கொடூர ஆசிரியர் போக்சோ கைது..!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற ஆசிரியர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் எச்சரித்துள்ளார். இதனால், அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியான மாணவி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

school student rape case...teacher arrest
Author
Thiruvannamalai, First Published Jun 27, 2021, 4:44 PM IST

திருவண்ணாமலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆசிரியர் மாணவியை கர்ப்பிணியாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆங்கில பட்டதாரியாக வெங்கடேசன் (31) பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், பள்ளி நிர்வாகம் அவரை திடீரென வேலையில் இருந்து நீக்கியது. இருந்தபோதிலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்த மாணவியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.

school student rape case...teacher arrest

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற ஆசிரியர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் எச்சரித்துள்ளார். இதனால், அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியான மாணவி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். 

school student rape case...teacher arrest

இதனையடுத்து, அந்த சிறுமி நடந்தவற்றை கூறி பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் நேற்று திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியரை அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, சிறுமியை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, ஆசிரியர் மீது  5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஆசிரியர் வெங்கடேசனுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios