தஞ்சை அருகே 10-ம் வகுப்பு மாணவியை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள தோப்பு நாயக்கன் விடுதியை சேர்ந்த கருப்பையன் மகன் ரஜினி (38). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 10-வகுப்பு மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, 10-வகுப்பு மாணவி ஒருவரை கடத்தி சென்று ஒருநாள் முழுவதும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால், பள்ளிக்கு சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாதையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். பின்னர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  

இந்நிலையில், மறுநாள் காலையில் காரில் அழைத்து வந்து யாருமில்லாத இடத்தில் இறக்கிவிட்டு இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். பின்னர், பேருந்தில் ஏறி வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோர்களிடம் கதறியபடி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுதொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை பலாத்காரம் செய்த கார் ஓட்டுநர் ரஜினியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் திருவோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.