Asianet News TamilAsianet News Tamil

ஓரின சேர்க்கைக்கு மறுத்த பள்ளி மாணவன் கொலை.. சென்னையில் மாறுவேடத்தில் சுற்றிய குற்றவாளி கைது..

ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜீவாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து மருத்துவர்கள், ஜீவா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

School student murder.. Criminal arrested in Chennai tvk
Author
First Published Oct 6, 2023, 1:54 PM IST | Last Updated Oct 6, 2023, 1:54 PM IST

கடலூர் அருகே 12ம் வகுப்பு பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மொட்டை அடித்துக்கொண்டு மாறுவேடத்தில் சென்னையில் சுற்றித்திரிந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்த வீரமணி. இவரது மகன் ஜீவா (17). விருத்தாசலம் அரசு மேல்நிலைப்பள்ளில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த அக்டோபர் 3ம் தேதி பள்ளிக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்த ஜீவாவிடம் மின்சாரத் துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் ஆனந்த் தனியாக பேச வேண்டும் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். 

அப்போது  இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜீவாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து மருத்துவர்கள், ஜீவா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஓரின சேர்க்கைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த குற்றவாளியை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். கொலையாளியின் செல்போன் சிக்னலின் அடிப்படையில் அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் சென்னைக்கு விரைந்த தனிப்படையினர் தாம்பரத்தில் மொட்டை அடித்து மாறுவேடத்தில் சுற்றித்திரிந்த குற்றவாளி ஆனந்தை மடக்கி பிடித்தனர்.  அவரிடம் விசாரணைக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாக வாய்ப்புள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios