கோவையில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் தொல்லை காரணமாக மனவேதனையில் அடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவையில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவையில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் தொல்லை காரணமாக மனவேதனையில் அடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மாணவி தற்கொலைக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொந்தரவு காரணம் என புகார் எழுந்தது.

இதனையடுத்து, இதற்கு காரணமான பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், புகார் குறித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தின்கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை அவரை பெங்களூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கோவை மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய புகாரில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
