12 வயது பள்ளி சிறுமிக்கு 30 பேர் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். அந்த சிறுமியை சில தங்களது பாலியல் வெறிக்கு பயன்படுத்துவதாக, பள்ளி நிர்வாகத்திற்கு அந்த பகுதி மக்கள் புகார்கள் கொடுத்தனர். இதனால் பள்ளி நிர்வாகம் அதுபற்றி அறிந்து கொள்ள அந்த சிறுமியை தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். சிறுமியிடம் நடத்தப்பட்ட கவுன்சிலிங்கில் அவரை பல பேர் சேர்ந்து பலவந்தமாக கற்பழித்தது  உண்மை என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இந்த தகவலை குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த பள்ளிக்கூடத்திற்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த சிறுமி தனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி அவர்களிடமும் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து பள்ளி சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி மலப்புரம் போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கிய போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது வீடு அருகே வசிப்பவர்கள் என்று பலரிடமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த சிறுமிக்கு கடந்த 2 வருஷமாக பாலியல் கொடுமை நடந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சிறுமியை 30-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு அந்த சிறுமியின் பெற்றோரும் உடந்தையாக இருந்த தகவலும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் தந்தை மற்றும் மேலசெல்லரி பகுதியை சேர்ந்த அ‌ஷரப், செங்காலங்காடி பகுதியை சேர்ந்த சைஜு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி மலப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். சிறுமியின் வீடு அருகே வசிக்கும் பொதுமக்கள் இதுபற்றி கூறும்போது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமையில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.