பேஸ்புக் காதலனை பார்க்க காரில் சென்ற பள்ளி மாணவியை காரில் வைத்து கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவாராம். அதன் படி பேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்த தரணி(22) அறிமுகமானார். தொடர்ந்து இரண்டு பேரும் சாட்டிங் செய்து வந்தனர்.

இதுவே நாளடைவில் 2 பேருக்கும் இடையே காதலாக மாறியது. அதன்படி தினசரி மணிக்கணக்கில் பேச தொடங்கினர். பின்னர் நேரில் சந்திக்க ஆசைப்பட்டனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அப்போது கோழிக்கோடு மாவட்டம் மணாசேரியை சேர்ந்த விபின்ராஜ் (22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.  உடனே விபின்ராஜிடம் தனக்கு கிருஷ்ணகிரியில் ஒரு காதலர் இருக்கிறார். அவரை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளேன் என்றார். காதலனை சந்திக்க உதவி செய்வதாக விபின்ராஜ் கூறியிருக்கிறார். 

புதிய நண்பரை நம்பிய மாணவி கடந்த 2ம் தேதி கிருஷ்ணகிரிக்கு வருவதாக காதலனிடம் கூறினார். அதன்படி விபின்ராஜ் அவரது நண்பரான அஜித்ராஜ்(23), ஜோபியன் (23) ஆகியோர் ஒரு காரில் அழைத்துச் சென்றனர். அப்போது வழியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் கார் நின்றது திடீரென 3 பேரும் சேர்ந்து மாணவியை காரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், ஓசூர் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு திரும்பி சென்றுவிட்டனர். அனாதையாக நின்ற மாணவி காதலன் தரணிக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே காதலன் வந்து மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

இதனிடையே, மாணவியை காணாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து முக்கம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் மாணவியின் செல்போன் டவர் அடிப்படையில் விசாரித்தனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர். அவரது காதலன் தரணியையும் கைது செய்தனர்.  பின்னர் மாணவி தன்னை 3 பேர் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விபின்ராஜ், அகித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.