தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறை ஒன்றியம் காமன் கல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் 55 வயதான இவர் பள்ளி மாணவிகளை பார்த்தாலே தொட்டு பேசும் நினைப்பு வந்துவிடுமாம், 

தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது, சரியாக படிப்பில் கவனம் செலுத்தாத மாணவிகளுக்கு அட்வைஸ் பண்ணும் பெயரில் கண்ட இடத்தில் கைவைத்து சில்மிஷமும் செய்து வந்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோர்கள் கடமலைக்குண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு , கல்வித்துறை அதிகாரிகளிடமும் ஒரே நேரத்தில் புகார் அனுப்பியுள்ளனர்.

மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை தான் என தெரிய வந்தது. இதனையடுத்து அவரை உத்தமபாளையம் ஒன்றியத்துக்கு மாறுதல் செய்தனர். அதன் பின்னர் மீண்டும் காமன் கல்லூர் பள்ளிக்கே நியமிக்கப்பட்டார். இதனால் மாணவிகளும், பெற்றோர்களும் அவரை பள்ளியில் இருந்து நீக்க கோரி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ரவிச்சந்திரன் தலைமறைவானார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து ரவிச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி ஆண்டிப்பட்டி மகளிர் போலீசார் ரவிச்சந்திரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை இன்ஸ்பெக்டர் உஷாதேவி கைது செய்து சிறையில் அடைத்தார்.